அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா

 அகஸ்தியா வித்யா மந்திர்  பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா

அகஸ்தியா வித்யா மந்திர் சி.பி.எஸ்சி பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா 27 .1 .2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. திருமதி ஆர். சரண்யா. ஐ.ஏ.எஸ்., உதவி ஆட்சியர், ஓசூர். அவர்கள் விழாவிற்கு வருகை தந்து, சிறப்பித்து தேசியக் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து   பள்ளித் தாளாளர் திரு .எம் நடராஜன்., அவர்கள் ஒலிம்பிக் கொடியையும் , பள்ளி முதல்வர் திருமதி எஸ்.உத்தரி யம்மாள் அவர்கள் பள்ளிக் கொடியையும் ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இவர்களுடன் பள்ளித் துணைத் தாளாளர் திரு சிவானந்தா, பள்ளி செயற்குழு உறுப்பினர் திரு. பாலசுப்பிரமணியம் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் செயலாளர்களான திரு. ஜி. லோகநாதன், மற்றும் திரு.ஜெ. வெங்கட்ராமன் அவர்களும், பல துறையினைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளி அலுவலகப் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் உதவி ஆட்சியர் திருமதி ஆர். சரண்யா., ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்புரையாற்றி, பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினார்கள்.  பின்னர் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

Hosur Reporter. E. V. Palaniyappan