நாட்டின மீன்களை பெருக்கும் விதமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை தென்பென்னை ஆற்றில் விட்டார் மாவட்ட ஆட்சியர்

 நாட்டின மீன்களை பெருக்கும் விதமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை தென்பென்னை ஆற்றில் விட்டார் மாவட்ட ஆட்சியர்

*ஓசூரில் நாட்டின மீன்களை பெருக்கும் விதமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை தென்பென்னை ஆற்றில் மாவட்ட ஆட்சியர் இருப்பு செய்யப்பட்டார்*

தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்  கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாத்தகோட்டா கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.

குறிப்பாக  அழிவின் நிலையில் உள்ள நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு போன்ற நாட்டின மீன் குஞ்சுகள் விடும் பணியினை தென்பெண்ணை ஆற்றில்  நடைப்பெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் ஆற்றில் நாட்டின் மீன் உற்பத்தி ஆண்டிற்கு 20 டன் மீன்கள் கூடுதலாக உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உள்ளது மேலும் இப்பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் பொது மக்களுக்கு நாட்டின் மீது கிடைக்க பெறுவதற்கு வழி வகுப்போடு அழிவின் விளிம்பில் நிலையில் உள்ள நாட்டின மின் நிலங்களை பாதுகாப்பதற்காக இத்திட்டத்தில் செயல்படுத்த படுகிறது, மேலும் 70 கி.மீ தூரம் வரை பாய்ந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றில் ஒரு கி.மீ.தூரத்திற்க்கு 2000 நாட்டின மீன் குஞ்சுகள் என 70 கி.மீட்டருக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை ஆற்றில் விடப்பட்டன.

மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி ஆற்றில் மீன் குஞ்சுகளை விடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் ரத்தினம்,கூட்டுறவு சங்க தலைவர் சிவசங்கர், துணைத் தலைவர் சூடப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.