தமிழகத்தில் உள்ள கல்வி பாகுபாடுகளை அகற்ற வேண்டும் : மாநில கல்விக் கொள்கைக்கு தனியார் பள்ளிகள் பரிந்துரை....!

தமிழகத்தில் உள்ள கல்வி பாகுபாடுகளை அகற்ற வேண்டும் :  மாநில கல்விக் கொள்கைக்கு தனியார் பள்ளிகள் பரிந்துரை....!

தமிழகத்தில் உள்ள கல்வி பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்று  தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்  நிலை மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்  கே. ஆர். நந்தகுமார்.  மாநில கல்விக் கொள்கை உயர்நிலை குழுவுக்கு அனுப்பி உள்ள பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலக் கல்விக் கொள்கை அமைப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்குமான வரைவு நகல்தயாரிக்கும் பணியில் எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள்  சங்கத்தைஅழைத்து எமது கருத்துக்களை  கேட்டமைக்கு   இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய துணைக் கண்டத்தில் எந்தவொரு மாநிலமும் முன்னெடுக்காத மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த

கல்வியை நமது தமிழக மாணவர்களுக்கு வழங்குவதற்காக மேற்கொண்டுள்ள

முற்போக்கு முயற்சிக்கு எங்களது

சங்கம் வரவேற்பையும்

வாழ்த்துக்களையும்

தெரிவித்துக் கொள்கிறது.

 அதே நேரத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 

ஒரே மாதிரியான கல்வியை அடுத்த

கல்வியாண்டில்

வழங்க இருக்கும்

சூழலில் மிக வேகமாகவும் ஆழமாகவும் சிந்தித்து பிற மாநிலக் கல்வி முறையை விஞ்சும்

அளவிற்கு புதிய

மாநிலக் கல்விக் கொள்கையை அமுல்

படுத்த துடிக்கும் தமிழக அரசிற்கு

மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசின் அவசர சட்டம் திட்டம் எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும் என்று ஐயமாக உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்த இதே தமிழக அரசு அதற்குப்பின் சமச்சீர் கல்வி சரி இல்லை தரம் குறைவு என்று அனைத்து கல்வியாளர்களாலும் பேசப்பட்டு பின்னர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முதன்மைச் செயலாளர் திரு. உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களின் தலைமையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு பெரும் பாராட்டு கிடைத்துள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில்  பல்வகையான கல்வித் திட்டங்கள்

நடைமுறையில் உள்ளன.

குறிப்பாக

மத்திய அரசின்

கல்வித் திட்டமும்

மாநில அரசின் கல்வித்

திட்டமும்  நடைமுறையில்

உள்ளன.

அடுத்த

கல்வியாண்டு முதல்

 இந்தியப் பேரரசின்  புதிய தேசியக்

கல்விக் கொள்கை இந்தியா முழுமைக்கும் 

அமுல்படுத்துவதற்கான வரன்முறைகள்

நடைமுறைப் படுத்தப்

பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில்

தமிழக அரசு எந்த

வகையிலும் தேசியக்

கல்விக் கொள்கை க்கு குறைவுபடாத

வகையில் மாநிலக்

கல்விக் கொள்கைக்

கான வரைவுத் திட்டங்கள் உருவாக்க ப்பட வேண்டும். அல்லது தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.

*தமிழ் நாட்டில் உள்ள

தமிழக அரசுப் பள்ளிகள் அனைத்தும் ஒரே

அமைப்புக் கொண்ட

வகையில் அமைதல்

வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்கு

கல்வி வழங்கும்

மழலையர்

வகுப்புகள் தொடங்கப்பட

வேண்டும்.

குறிப்பாக

தனியார் மற்றும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்புகள் தொடங்கப்பட்டு  அனைத்தும் சமச்சீர்

அமைப்பைப் பெறும்

பள்ளிகளாக உருமாற்றம் பெற

வேண்டும். பாலர் பள்ளி துவக்கப்பள்ளி  உயர்நிலைப் பள்ளி

மெட்ரிகுலேஷன் பள்ளி மேல்நிலைப்பள்ளி என்ற வேறுபாடுகள் களையப் பட வேண்டும்.

உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்புகள் துவங்குவதற்கான

கட்டமைப்புகளை அரசு உடனடியாக

ஏற்படுத்த வேண்டும்.

*தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள்

தனியார் பள்ளிகள்

அரசுப் பள்ளிகள்

என்ற பாகுபாடுகளை

நீக்கி அனைவருக்கும் ஒரே

 மாதிரியான

சலுகைகள், இட ஒதுக்கீடுகள்  வழங்கப்படுவதை

உறுதி செய்தல் வேண்டும்.

*குழந்தைக் கல்வி முதற் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை

பயிற்று மொழி தாய்

மொழி அல்லது வட்டார மொழியில்

போதிக்கப் பட வேண்டும்.

*பள்ளிகளை குழந்தைக் கல்வி

முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பநிலைப்

பள்ளி (Nursery and Primary school) என்று

அழைத்தல் வேண்டும்.

குழந்தைக் கல்வி முதல்

எட்டாம் வகுப்பு வரை

உள்ள பள்ளிகள்

நடுநிலைப் பள்ளி

(Middle School) என்று

அழைத்தல் வேண்டும்.    

குழந்தைக் கல்வி

வகுப்பு முதல் பத்தாம்

வகுப்பு வரை உள்ள

பள்ளிகள் உயர்நிலைப் பள்ளி

(High School or Secondary School) என்று அழைத்தல் வேண்டும்.

குழந்தைக்

கல்வி 

முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள்

மேல்நிலைப் பள்ளி

(Higher secondary school  (அ )Senior Secondary School) என்று அழைத்தல் வேண்டும்.

* தொழில் நுட்பம்

வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஒரு 

 மாநிலத்தில்

இருந்து மற்றொரு

மாநிலத்திற்கு

பணி நிமித்தமாக இளைஞர்கள்

செல்ல வேண்டி

உள்ளதால் மூன்றாம்

வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ்,

ஆங்கிலம் தவிர வேறு பல மொழிகளின் தொகுப்பில் உள்ள கூடுதலாக ஒரு மொழி தேர்வு செய்யப்பட்டு 

மூன்று மொழிகளைக்

கற்கும் (மும்மொழி கல்விக் கொள்கை ) வாய்ப்பினை

மாணவர்களுக்கு

வழங்குதல் வேண்டும்.

தமிழகத்தில் இன்றைய பாடத்திட்டங்கள்

சிறப்பாக

கட்டமைக்கப் பட்டாலும் தேர்வு முறை  மனனம்

செய்து எழுதும்

திறனையே ஊக்குவிப்பதாக

உள்ளது.

இத்தகைய

முறை வரும் காலங்களில் நம்

மாணவர்களை சிறந்த போட்டித் தேர்வுகளை தேசிய

அளவில் எதிர்கொள்ளும் வகையில் அமைய வில்லையெனில்

அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

*சமீபகாலங்களில்

தமிழக ஆசிரியர்களின் போதிக்கும் திறன்

மிகக் குறைவான

அளவில் மட்டுமே

உள்ளன என்பதை

மறுப்பதற்கில்லை.

எண்ணற்ற தனியார் பள்ளிகள் Neet/ IIT/JEE போன்ற நுழைவுத் 

தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்க

ஆந்திரா மற்றும்

தெலங்கானா, ராஜஸ்தான் போன்ற

மாநிலங்களிலிருந்து

ஆசிரியர்களை அழைத்து வரும் நிலை எதனால் என்பதை அரசு உற்று

நோக்க வேண்டும்.

எனவே நம்

 தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு

சிறந்த

புத்தாக்க பயிற்சிகள்

வழங்கப்பட வேண்டும்.

*தமிழ் நாட்டில் மாணவ மாணவிகளிடையே

ஒழுக்கக் கேடான

செயல் முறைகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை

அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர் வரும் மாநிலக்

கல்விக் கொள்கை

மாணவர்களை நம்

 தாய் திருநாட்டிற்கான 

கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம்

 தெய்வ பக்தி தேசபக்தியுடன் கூடிய நல் உணர்வுகளை வளர்த்து கொள்வதற்கான

வாய்ப்புகளையும், மாணவர்கள் ஒழுக்க கேடாக நடந்து கொள்கிற போது சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிற போது அவர்களை

கண்டிக்கவும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கி டும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட   வேண்டும்.

*ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு ,

பத்தாம் வகுப்பு,

பனிரெண்டாம் வகுப்பில் சிரமம்

பாராது கண்டிப்பாக அரசு பொதுத் தேர்வுகளை

நடத்தி மாணவர் களின் கல்வித் திறனை ஒவ்வொரு கட்டங்களிலும் ஒப்பீடு

செய்து, அதன் பிறகு

மேம்படுத்தும் திறனை உருவாக்க வேண்டும்.

இன்று

பத்தாம் வகுப்பு வரை வரை பயிலும் 

எழுதப் படிக்கத்

தெரியாத கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் தெரியாத  மாணவர்கள் லட்சக்கணக்கில் 

உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*மாணவர்கள் உயர் கல்வி கற்க கல்லூரிகளுக்குச்

செல்லும் போது கண்டிப்பாக மத்திய

அரசு உருவாக்கி யுள்ள தேசியத் தேர்வு

முகமை (National Testing Agency) நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்

கொள்ள வேண்டும்.

அப்படியானால் நமது

மாநிலக் கல்விக் கொள்கை மூலம்

பயிலும் மாணவர்கள்

அத்தகைய தேர்வுகளை எதிர் கொள்ள முடியுமா என்பதையும் கவனமுடன்உற்று நோக்க வேண்டும்.

*தேசியக் கல்விக் கொள்கையில் தொழிற் கல்விக்கு (Skill

Development)முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது.

அப்படியானால் தொழிற்கல்வி

குறித்து மாநிலக் கல்விக் கொள்கையின் நிலைப்பாடு குறித்த

விளக்கங்கள்  மாணவர் மத்தியில்

உறுதிப் படுத்துதல்

வேண்டும்.

*இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்

தேசியக் கல்விக் கொள்கை அமுல் படுத்தப்படுமானால்

மாநிலக் கல்விக் கொள்கையை தேர்வு

செய்யும் மாணவர்களுக்கு

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில்

வேலை வாய்ப்பைப்

பெறுவதில் தடை

உண்டாகுமா? மேலும் இந்திய பேரரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகள் ஐசிஎஸ்சி பள்ளிகள்

ஐ.பி. பள்ளிகள் கேம்பிரிட்ஜ் பள்ளிகள் எல்லாம் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது தமிழக  பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவர்கள் நிலையையும்  நாம்

கருத்தில் கொண்டு நாம் அனைவரும் இந்தியர் என்பதால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது ஒன்றே சரியாக இருக்கும் என்று எமது சங்கம் கருதுகிறது.

*தேசியக் கல்விக் கொள்கையை அமுல்

படுத்தினால் நிறைய பயிற்சிகளையும் சலுகைகளையும்

மத்திய அரசு வழங்க

உள்ளதாக அறிகிறோம். அத்தகைய உதவிகள்

மாநிலக் கல்விக் கொள்கயைத் தேர்வு

செய்யும் மாணவர்களுக்கு

மாநில அரசு வழங்குமா?

*தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் போது ஆசிரியர்கள்

தங்கள் திறனை ஆண்டுதோறும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற

நிபந்தனை உள்ளது.

அத்தகைய திறனை

தகுதித்தேர்வு மூலம்

உறுதிப் படுத்த வேண்டும்.

இத்தகைய நிபந்தனைகளை

மாநில கல்விக் கொள்கையைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு பொருத்துமா?

*கல்வி என்பது ஒரு தேசத்தின் கண்கள்ஆகும்.இளம் தலைமுறையினரை செம்மைப்படுத்தி இந்த மண்ணைவளமாக்க வேண்டுமெனில் கல்வியில் மிகப்பெரிய அளவில்மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உடனடி

தேவை

 என்பதை

எங்கள் சங்கம் நன்றாக உணர்ந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை என்பது

பல ஆண்டுகளாக

ஆய்வு செய்யப்பட்டு

பல்வேறு வல்லுனர்கள், கல்வியாளர்கள்,

நிபுணர்கள் மற்றும்

நிபுணத்துவம் பெற்ற

பல்வேறு துறைசார்

பெருமக்கள் 

ஆகியோரைக் கொண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள கல்வியாளர்கள் ஆசிரியர் பெருமக்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பல்லாயிரக்கணக்கானோரின் கருத்துக்களின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு குறைகள் கலைந்து உருவாக்கப்பட்டது தான்  தேசியக்கல்விக் கொள்கை..

குறுகிய கால அளவில் தீர்மானிக்க ப்படும் மாநிலக் கல்விக் கொள்கையில்

அத்தகைய ஆய்வுகளை மத்தியஅரசுக்கு இணையாக செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெளிவு

படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை.

*தற்சமயம் தமிழக அரசு நீட் தேர்விற்கு

எதிராக கொள்கையை அறிவித்தபோதும்

கடந்த ஆண்டு

இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு

அடுத்து அதிக எண்ணிக்கையில்

நீட் தேர்வு எழுதியவர்கள் தமிழக

மாணவர்கள் என்பதை அறிவோம்.

தமிழ் நாட்டில் மத்தியஅரசுப் பள்ளிகளில் தேசியக் கல்விக் கொள்கையும் தமிழக அரசுப் பள்ளிகளில் மாநிலக் கல்விக் கொள்கையும் செயல்படத் துவங்கும் போது தமிழகக் கல்வியை புறக்கணித்து சிபிஎஸ்இ போன்றபள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லக்கூடும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

இறுதியாக மேற்கூறிய குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில்

 உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கநமது தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டால் எமது சங்கம் தமிழக அரசை மீண்டும் வாழ்த்தி வரவேற்போம். 

 அது மட்டுமல்ல சென்ற முறை கலைஞர் அரசு முழுக்க தனியார் பள்ளிகளுக்கு எதிராக சமச்சீர் கல்வி திட்டத்தையும் தனியார் பள்ளி கல்லூரி கல்வி கட்டண நிர்ணயக் குழுவையும் கொண்டு வந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்காக இருந்த மெட்ரிகுலேஷன் போர்டை கலைத்து 1200 மதிப்பெண்களை 500 மதிப்பெண்களாக குறைத்து தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் .

 அரசு பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறாத போது... அரசு பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கும் பல்வேறு பயிற்சிகள் தனியார் பள்ளிகளுக்கு வழங்காத போது... அரசு பள்ளிகளுக்கு சொத்து வரி இல்லை என்கிறபோது தனியார் பள்ளியில் மட்டும் லட்சக்கணக்கில் சொத்து வரி 150% உயர்த்தி கட்ட வேண்டும் என்பதும்.. அரசு பள்ளிகளுக்கு மின் கட்டணம் உயர்த்தாத போது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் 77% மின் கட்டணம் உயர்த்தியு ள்ளதும்.... தனியார் பள்ளிகள் மட்டும் தொடர்ந்து ஆண்டு தோறும் அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் அங்கீகாரம் பெறுவதற்கான சுகாதாரச் சான்று, தீய ணைப்புத் துறையின் தடையின் மைச் சான்று கட்டிட உறுதிச்  சான்று, கட்டிட உரிமைச் சான்று பெறுவதற்கு மேற்கண்ட துறைகளுக்கு லஞ்சமாக  லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளதையும் மாநில கல்வி கொள்கை குழு கணக்கில் எடுத்துக் கொண்டு அரசு ஒரு கண்ணுக்கு வெண்ணையும்  ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் தடவும் வேலையை செய்யக்கூடாது என்று பரிந்துரைக்க வேண்டுகிறோம்.. அங்கீகாரம் பெற்று பத்தாண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கிட வேண்டும் எனும் அரசாணையை அமல்படுத்திட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பித்து வழங்கிட வேண்டும். ஆன்லைன் மூலம் ஒளிவு மறைவற்ற கையூட்டு பெறாமல் அங்கீகாரம்  வழங்கிட வேண்டும். அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்வி கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% மாணவர்களை சேர்த்திடும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் கல்வி கட்டணம் அந்த அந்த கல்வி ஆண்டே அனைவருக்கும் ஒரே மாதிரியாக  வழங்கிட வேண்டும்.

 தனியார் பள்ளிகளுக்கான சுயநிதி பள்ளி கல்வி இயக்குனராகம் உருவாக்கப்பட்ட பின்னால் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட்ட பின்னால் கூடுதலாக முதன்மை கல்வி அலுவலர்கள் தனியார்  பள்ளிகள் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்று பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

 இன்றைக்கு தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உயர்கல்வி உயர்ந்து சிறந்து ஒளிவிசிட ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள  தேசிய கல்விக் கொள்கை திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி இல்லம் தோறும் கல்வி..புதிய பாரத எழுத்தறிவு திட்டம். எண்ணும் எழுத்தும்.. என பல திட்டங்களை பெயர் மாற்றி அறிவித்துக் கொண்டுள்ளதையும் கவனத்தில் கொண்டு மாநில அரசு கௌரவ பிரச்சனை பார்க்காமல் இந்திய பேரரசு கொண்டு வந்துள்ள  தேசிய கல்விக் கொள்கையை ஏற்று  அமல்படுத்துவது ஒன்றே சிறந்தது என்று எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை பணிவோடு வேண்டுகிறோம்..

 தங்கள் உண்மையுள்ள....

 கே ஆர் நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர்.

 பேராசிரியர் டாக்டர். ஏ கனகராஜ் மாநில தலைவர்.