பள்ளி வாகனங்களுக்கு ரிவர்ஸ் கேமரா பொருத்த இடைக்கால தடை....

 பள்ளி வாகனங்களுக்கு ரிவர்ஸ் கேமரா பொருத்த இடைக்கால தடை....

 57 ஆயிரம் தனியார் பள்ளி வாகனங்களுக்கு மட்டும் ரிவர்ஸ் கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை அண்மையில் உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகன ங் களுக்கு எப்சி செய்ய மறுத்து வந்தார்கள்.

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால அவகாசம் கேட்டு அனைத்து ஆர்டிஓக்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

 அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது மாநில சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இடைக்கால தடை உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியு ள்ளது.

 நிரந்தர தடை ஆணை பெறுவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்..

 பள்ளி நிர்வாகிகள் யாரும் உங்கள் பள்ளி வாகனங்களுக்கு ரிவர்ஸ் கேமரா இப்போது வைக்க வேண்டாம்...

 சொத்து வரியும் கட்ட வேண்டாம் பொறுத்து இருங்கள். உச்ச நீதிமன்றத்தில் நமக்கு  உரிய ஆணையை விரைவில் கிடைக்கப்பெற்று  நமது சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்குவோம்...

 உங்கள் நந்தகுமார். மாநிலச் செயலாளர்.