ஓசூர் மாநகராட்சி கடைசி மாமன்ற கூட்டம். திமுக அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்- கூச்சல் குழப்பம்.

 ஓசூர் மாநகராட்சி கடைசி மாமன்ற கூட்டம். திமுக அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்- கூச்சல் குழப்பம்.

2022 ஆம் ஆண்டின் ஓசூர் மாநகராட்சி கடைசி மாமன்ற கூட்டம். திமுக அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்- கூச்சல் குழப்பம்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் 2022 ஆம் ஆண்டின் கடைசி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இதில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா, துணை மேயர் சி ஆனந்தய்யா மற்றும் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

2022 ஆம் ஆண்டின் கடைசி கூட்டம் என்பதால் மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் வந்திருந்த மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரும் 2023 புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களை நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். 

இதைத்தொடர்ந்து அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளின் பிரச்சனைகள் குறித்து பேசினார்கள். தொடர்ந்து அதிமுக உறுப்பினர் நாராயணன் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அவலம் குறித்து பேச முற்பட்ட பொழுது, 

திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து சம்பந்தப்பட்ட வார்டுகளை பற்றி மட்டுமே பேச வேண்டும் என கூச்சலிட்டனர். இதனால் அவையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து மேயர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்த பின் கூட்டம் நடைபெற்றது .

இதில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 199 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.