ஆ . ராசாவுக்கு மத்திய அரசு வைத்த ஆப்பு...!?

 ஆ . ராசாவுக்கு மத்திய அரசு வைத்த ஆப்பு...!?

தி.மு.க. எம்.பி., ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இவர் மத்திய அமைச்சராக இருந்த போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தர லஞ்சமாக பெற்ற பணத்தை பினாமி பெயரில் கோவையில் 45 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
Latest Tamil News

இதன் மதிப்பு ரூ. 55 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சொத்துக்களை முடக்கிஉள்ளது.

மத்திய அரசின் இந்த தீவிர  நடவடிக்கையை வரவேற்றுள்ள பொதுமக்கள்....

அவ்ளோ பெரிய 2G யை சட்ட ஓட்டைகள் கொண்டு முடித்த மாதிரி ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஆபிசர் சார். கொஞ்சமா பேசி இருக்காரு இவர்.

இந்த மாதிரி எல்லா அரசியல் வாதிகள் ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்களை முடக்குங்கள். அந்த சொத்துக்களை ஏழை மக்களுக்கு கொடுத்து வறுமை இல்லாத நாட்டை உருவாக்குங்க.

என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.