ஓசூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் முதலிடம்

 ஓசூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் முதலிடம்

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம் அளவிலான பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டிகள் கிருஷ்ணகிரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் 28/10/2022 நடைபெற்றது.

இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் 17வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்தனர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் லதா அவர்களும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர்களாக தலைவர் எல்லோரா மணி, ராமமூர்த்தி மற்றும் பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம்,  பாராட்டி வாழ்த்தினார்கள்.

Hosur Reporter. E. V. Palaniyappan