கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு 

இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு மேற்கொண்டார் இதை அடுத்து ஓசூரில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் 

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் பொழுது தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசின் பிரதமர் உள்ளிட்டோரின் புகைப்படங்களை வைக்காமல் கூட்டாட்சி தத்துவத்தையே சிதைத்துள்ளது. தற்பொழுதைய ஆளும் திமுக அரசாங்கம் கூட்டாட்சி அமைப்பையே உடைத்து நாசமாக்குகிறது. எனவே தமிழக மக்கள் இந்த அரசுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் 8 ஆண்டுகளில் பல மடங்கு மக்களுக்கான நல திட்டங்களை வழங்கியுள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதை காட்டிலும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியுள்ளது. 

குறிப்பாக தமிழகத்தில் துவக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளும் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்து துவக்கப்பட்டு அவைகள் அனைத்தும் தற்பொழுது மருத்துவ கல்லூரிகளாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதே அதற்கு சாட்சியாகும். 

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைப் போல எந்த நிலையிலும் மத்திய பிஜேபி அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. 

மத்திய அமைச்சர்கள் தற்பொழுது மாநிலத்தில் மாவட்டம் தோறும் மேற்கொள்ளும் ஆய்வுகள் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் பொழுது பொது மக்களை மத்திய அமைச்சர்கள் நேரில் சந்திப்பதே அரிதாக இருந்த நிலையில் இப்பொழுது மக்களுக்கும் அரசுக்கும் மிகுந்த நெருக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது 

எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு மற்றும் அதன் முன்னேற்றத்திற்கு நல திட்டங்களை செய்து கொண்டே இருக்கும்.

Hosur Reporter. E. V. Palaniyappan

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்