*மழையால் வீடுகள் சேதம் அடைந்ததால்**மாற்று இடம் *வழங்கக்கோரி மனித *உரிமை கழகம் அரசியல்* *கட்சியின் சார்பில் கோட்டாட்சியரிடம் *கோரிக்கை மனு*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நல்லூர் பஞ்சாயத்து உட்பட்டஅனுமந்த் நகர் பகுதியில் 200 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன நிலையில்
இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தில் வீடுகள் சேதம் அடைந்ததால் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர் மேலும்
நேற்று ஓசூர் கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியரிடம் மாற்று இடம் வழங்க கோரி மனித உரிமைகள் கழகம் அரசியல் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்
பின்னர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த மனித உரிமைகள் கழக அரசியல் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பி.மணிவண்ணன்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தில் அனுமந்த் நகர் பகுதியில் 20. வீடுகள் சேதம் அடைந்தது
மற்றும் நான்கு வீடுகள் இடிந்து விழுந்ததுபெரு வெள்ளத்தில் குடியேறுக்கவே முடியாமல் இருந்தோம் இதைக் கண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்
பின்னர் இங்குள்ள 20 குடும்பங்கள் இங்கு குடி இருக்க சாதகமான சூழ்ல் இல்லை என்பதால் மாற்று இடம் குடியிருக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்
அதன் அடிப்படையில் இன்று மாற்று இடம் தரக்கோரி சார் ஆட்சியர் அவர்களிடம் மற்றும் வட்டாட்சியர் அவர்களிடம் மனித உரிமை கழகம் அரசியல் கட்சியின் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் .பி. மணிவண்ணன் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இதைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர். மேல் அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் .இவ்வாறு பேட்டி அளித்தார்.
E. V. Palaniyappan