ராயக்கோட்டையில் அ.தி.மு.க. 51 -வது ஆண்டு துவக்கவிழா

 ராயக்கோட்டையில் அ.தி.மு.க. 51 -வது ஆண்டு துவக்கவிழா


கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.சார்பாக பொன்விழா ஆண்டு முடிந்து 51-வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் எம்.முருகன் தலைமையில் ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் கட்சி கொடி ஏற்றி நான்கு ரோடில் உள்ள அண்ணாசிலை அருகே முன்னால் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மலர்தூவி பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்கள் நிகழ்ச்சியில் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வி.கே.சண்முகம், முன்னால் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொருளர் மகேஷ்குமார், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, முன்னால் தலைவர் புருசப்பன், ஒன்றிய துணை செயலாளர் முனுசாமி,மாவட்ட பிரிதிநிதி பட்டாபி, பாலப்பன், சபரி சீனிவாசன், ராஜா,ராஜன் ராவ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சேகர், முன்னால் ஊராட்சி செயலாளர் பெருமாள், சுமைதூக்கும் சங்கம் கோவிந்தன், உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துக்கொண்டார்கள்.

B. S. Prakash