பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60வது குருபூஜையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். முருகேசன், ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி