பழமை வாய்ந்த ஸ்ரீ பெட்டதம்மன் திருக்கோயில் மண்டபம் திறப்பு விழா : தளி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

 பழமை வாய்ந்த ஸ்ரீ பெட்டதம்மன் திருக்கோயில் மண்டபம் திறப்பு விழா : தளி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலுகாண்டப்பள்ளி ஊராட்சியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெட்டதம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஏழை எளிய மக்கள் திருமணம் செய்து வருகிறார்கள். அதற்காக தேவஸ்தான கமிட்டி சார்பில் திருமண மண்டபம் கட்டி கொடுக்க வேண்டும் என தளி சட்டமன்ற உறுப்பினர் டி ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்தக் கொரிக்கையை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி ராஜா அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு மண்டபம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல பக்தர்கள் அனைவரும் ஒன்று பொதுமக்களுக்கு சேர்ந்து அன்னதானம் செய்வதற்காக புதிய மண்டபத்தை கட்டியுள்ளனர். அந்த மண்டபமும் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதேபோல இந்த கோயில் வளாகத்தில் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர் அந்த கோரிக்கையும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

B. S. Prakash. Thally Reporter