அரசு மருத்துவமனையில் மேடும் பள்ளமுமான மண் பாதையில் இழுத்து செல்லப்படும் ஸ்ட்ரெச்சர் : வலியால் துடிக்கும் அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள்*

 *அரசு மருத்துவமனையில் மேடும் பள்ளமுமான மண் பாதையில் இழுத்து செல்லப்படும் ஸ்ட்ரெச்சர்  : வலியால் துடிக்கும் அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள்*

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் பெண் நோயாளிகளை மருத்துவ ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் ஏற்றி மேடும் பள்ளமுமான மண் பாதை வழியாக பொதுவார்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது பெண் நோயாளிகள் வலியால் அலறி துடித்தனர். இது பார்ப்பவர்களை வேதனடையை செய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  அருகேயுள்ள கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் பெற்ற பெண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர். இன்று மட்டும் இந்த அரசு மருத்துவமனையில் 27 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.  குடும்ப நல அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட பெண்களை மருத்துவ ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் ஏற்றி அறுவை சிகிச்சை அறையில் இருந்து அருகில் உள்ள பொதுவார்டுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள குண்டும் குழியுமாக மண் பாதையில் ஸ்ட்ரெச்சரை இழுத்து சென்றபோது ஆப்ரேஷன் செய்து கொண்ட பெண்கள் கடுமையான வலியால் துடித்தனர். ஒவ்வொரு முறையும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இதுபோன்று ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும்போது வலியால் துடிக்கும் நிகழ்வு நடந்தேறி வருகிறது. ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் வலியால் துடிப்பதை பார்க்கும் அவரது உறவினர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.

எனவே இந்த அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரை இழுத்து செல்லும் வழியில் சிமெண்ட் தளம் அமைத்து கொடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

B s Prakash