அக்கோண்டப்பள்ளியில் ராஜாகால்வாய் ஆக்கிரமிப்பு தொடர் கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுப்பு

 அக்கோண்டப்பள்ளியில் ராஜாகால்வாய் ஆக்கிரமிப்பு தொடர் கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் அக்கோண்டப் பள்ளியில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சூடகானப்பள்ளி, அட்செட்டிப்பள்ளி எடப்பள்ளி ,ஆகிய கிராம பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஆனால் ராஜா கால்வாய் மற்றும் நீர்நிலை பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை நீர் கால்வாய் வழியாக செல்லாமல் தரைப்பாலம் வழியாக தார் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் தொழிற்சாலை அதிகமாக உள்ளதால்  வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 இதனை அறிந்த தளி சட்டமன்ற உறுப்பினர்               டி.ராமச்சந்திரன் அவர்கள்  விரைந்து வந்து வெள்ள நீரை பார்வையிட்டார்.

 கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் சீனிவாஷ், பைரமங்கலம் ஊராட்சித் துணைத்தலைவர் வெங்கடேஷ் உடன் இருந்தனர்.

இதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்சாலையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.