திமுக தான் ஆட்சியில் இருக்கும் என ஸ்டாலின் இறுமாப்புடன் பேசிக்கொண்டு வருகிறார் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேச்சு

திமுக தான் ஆட்சியில் இருக்கும் என ஸ்டாலின் இறுமாப்புடன் பேசிக்கொண்டு வருகிறார் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேச்சு


அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்திவிட்டு இனி வருங்காலங்களில் திமுக தான் ஆட்சியில் இருக்கும் என ஸ்டாலின் இறுமாப்புடன் பேசிக்கொண்டு வருகிறார் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேச்சு.

மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி அவர்கள் துவக்கி வைத்து கண்டன பேருரை ஆற்றினார்.

மக்களை வாடி வதைக்கும் விடியா திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்ததின் பேரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்து கண்டனப் பேருரை ஆற்றினார்.

அப்போது பேசியவர் திமுக அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சட்ட ஒழுங்கும் சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார் அதிமுக அரசு மக்களுக்காக கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது உதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம் கிராமப்புறங்களில் பெண்களை மேம்படுத்த ஆடு மாடு கோழிகள் வழங்கும் திட்டம் சுகாதாரத் துறையில் மினி கிளினிக் திட்டம் என பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறுத்தி உள்ளது இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் முதல்வர் ஸ்டாலின் இனிவரும் காலங்களில் திமுக தான் ஆட்சியில் இருக்கும் என இறுமாப்புடன் பேசி வருகிறார் அவருக்கு இந்த ஆர்ப்பாட்டம் காதுகளில் இடியாக விழ வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக் குமார் ஊத்தங்கரை எம் எல் ஏ தமிழ்செல்வம் நகர கழக செயலாளர் கேசவன். ஸ்ரீதர். குரு.

 பொருளார் கண்மணி. உள்ளிட்ட கட்சியின் கட்சியின் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றியம் நகரம் பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அமைப்பு தலைவர்கள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டு விடியா திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Krishnagiri Reporter. Moorthy