யாரப் தர்கா அருகே உள்ள சுற்றுசுவற் விழுந்து இருவர் பலி, இருவர் காயம்,

 யாரப் தர்கா அருகே உள்ள சுற்றுசுவற் விழுந்து இருவர் பலி, இருவர் காயம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் யாரப்தர்கா அருகே உள்ள அரசமரம் கோயில் உள்ளது,அதற்க்கு அருகில் மருத்துவர் ஒருவருடைய காலி நிலம் உள்ளது, இந்த இடத்தை சுற்றியும் 12 அடி உயரத்திற்க்கு ஹாலேபளாக் கற்களால் சுற்றுசுவற் போடப்பட்டிருந்தது, கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழையால் சுற்றுசுவர் இடிந்துவிழுந்ததில், 

அரச மரத்தடியில் இருக்கு பாம்பு புற்றை வணங்கி பிரகாரம் செய்துகொண்டிருந்த தேன்கனிகோட்டை ஜெய் தெருவை சேர்ந்த சஹானா, வயது 12) தந்தை பெயர் பாலாஜி, என்பவரும் அதே பகுதியை சேர்ந்த அமுல்யா வயது 11) தந்தை பெயர் வெங்கடாசலபதி என்பவர்கள் மீது சுற்றுசுவர் விழுந்ததில் இருவரும் பலத்த காயங்கள் ஏற்பட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அதில் சஹானா அவசர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார், மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீதா பேகம் வயது 35) கனவர் பெயர் ஜாகித்துல்லா, இவரும் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவர் உருஸ் திருவிழாவில் சுற்றுசுவர் அருகில் விளையாட்டு பொருள் கடை வைத்திருந்தவர், மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இஷாத் அலி என்பவர் தலையிலும், தாடையிலும் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், ஜெய் தெருவை சேர்ந்த அமுல்யா சிறுமி லேசான காயங்கலோடு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார், மேலும் இதுகுறித்து தேன்கனிகோட்டை காவல்துறையினர். விசாரணை செய்து வருகின்றனர், தேன்கனிகோட்டையில் உருஸ் திருவிழா முடிந்து இரண்டு நாட்களே ஆனபின்பு, வினாயகர் சதுர்த்தி நாளில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தி ஆழ்த்தியுள்ளது.

B. S. Prakash. Thally Reporter

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்