உலக தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி!!!

 உலக தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி!!!


ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்படுத்திட்டம், இளையோர் செஞ்சுருள் சங்கம், மற்றும் செஞ்சிலுவைச் சங்கம், கீழக்கரை ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பாக தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு நடைபயணப் பேரணி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர்.ஏ.ஏ சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேளானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் எஸ்.வசந்த் பிரியா நாச்சியார் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் எஸ். கபீர், பொருளாளர் சிவகார்த்திகேயன், மற்றும் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சுமார்120 க்கும் மேற்பட்ட மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் மாவட்ட செஞ்சுருள் சங்க அமைப்பின் பொருளாளர் எம். குணசேகரன் ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம் மட்டும் அமைப்பாளர் அல் நூர் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு இப்பேரணியை சிறப்புத்தனர். இப்பேரணியை கீழக்கரை காவல் நிலையத்தில் துவங்கி அரசு மருத்துவமனை வழியாக சென்று கீழக்கரை கடற்கரையில் நிறைவு பெற்றது. இப்பேரணிக்காக ஏற்பாடுகளை  கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் N.சுலைமான் S.முஹம்மது அஜீஸ், பேராசிரியை செல்வி S.சக்தி மற்றும் கல்லூரியின் செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவை சங்க அலுவலர் டாக்டர்.எம். ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி