ராயக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆய்வுக்கூட்டம்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கெலமங்கலம் கிழக்கு ஒன்றியம் ராயக்கோட்டை SGR திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆய்வுக்கூட்டம் ஒன்றிய தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ரமேஷ் வர்மா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வுக் கூட்டத்தினை வழி நடத்தினார். மேலும் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார், ஒன்றிய பொது செயலாளர்கள் வெங்கட்ராமணன், மகேந்திரன் பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் திப்பன், மூத்த நிர்வாகி முனுசாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆய்வுக்கூட்டத்தினை சிறப்பித்தனர்.
தளி தொகுதி செய்தியாளர்: பி. எஸ். பிரகாஷ்