100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்... டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, வழங்கினார்

 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்... டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, வழங்கினார்

கெலமங்கலம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்... டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, வழங்கினார்

ராயக்கோட்டை, ஆக.28 -கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் மொத்தம் 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் விழா ஜெக்கேரி ஊராட்சி சின்னட்டி அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கனார்.

 உதவி இயக்குனர் இளவரசன் அனைவரையும் வரவேற்று பேசினார் இதில் சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன்  கலந்துக்கொண்டு ஏழ்மை நிலையில் உள்ள  ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு  வெள்ளாடுகள், செம்மறியாடுகள் 100 பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கினார் பேசும்போது பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க அரசு திட்டம் வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார் பொதுமக்கள் அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், கால்நடை மருத்துவர்கள் ரவிசந்திரன், மாதேஷ், வெங்கட் சுப்பிரமணி,தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சின்னராஜ், ஸ்ரீதர்,சி.பி.ஐ ஜெயராமன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெக்கேரி ராஜேஷ்குமார் உட்பட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், கால்நடை துறை அதிகாரிகள் பயணாளிகள் கலந்துக்கொண்டார்கள்.

Thally Reporter. B. S. Prakash