திமுக M.P. செந்தில்குமார் காங்கிரஸ் M.P கார்த்திக் சிதம்பரம் கருத்து மோதல்.,?!

திமுக M.P. செந்தில்குமார் காங்கிரஸ் M.P கார்த்திக் சிதம்பரம்  கருத்து மோதல்.,?!

தர்மபுரி செந்தில்குமார் செய்தது தேவையில்லாத சர்ச்சை எனவும், ஒருவர் புதிதாக வண்டி வாங்கினால் கூட எலுமிச்சை பழத்தை வைத்து விட்டுதான் வண்டி எடுப்பார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மீண்டும் விமர்சித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.

அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார்.

மேலும் 'இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இது இந்து மத நிகழ்ச்சியா? மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி.' என அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

ஒருபுறம் இது விமர்சனத்தையும் பாராட்டுதலையும் பெற்றுள்ள நிலையில், அன்றே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தர்மபுரி செந்தில்குமார் செய்தது தேவையில்லாத சர்ச்சை என அவர் மீண்டும் விமர்சித்துள்ளது, அதுவும் திமுக, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் முன்னிலையிலேயே விமர்சித்துள்ளது திமுகவினரை அதிர்ச்சியிலும், காங்கிரஸ் கட்சியினரை தர்ம சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தர்மபுரி செந்தில்குமார் செய்தது தேவையில்லாத சர்ச்சை , ஒருவர் புதிதாக வண்டி வாங்கினால் கூட எலுமிச்சை பழத்தை வைத்து விட்டுதான் வண்டி எடுப்பார்கள். தமிழகத்தில் எந்த கட்சியாக இருந்ததாலும் வேட்புமனு தாக்கல் செய்தாலும் , பதவி ஏற்றாலும் கரி நாள் போன்ற நாளாக இல்லாமல் , நல்ல நாள் , நல்ல நேரம் பார்த்தே செய்கின்றனர் .

ஏனென்றால் அதுதான் நமது பழக்கம். எனக்கு பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் மாடல் , subbliess model போன்றவை பற்றி தெரியும். ஆனால் திராவிட மாடல் என்பது economic மாடலா அல்லது social model ஆ என தெரியவில்லை. திராவிட மாடல் social model என்பதை ஏற்கிறேன். அது Economic modelஆ என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.' என கூறினார். கார்த்தி சிதம்பரம் பேசிய போது சட்டசபை வளாகத்தில் பல திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.