மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் மோரேஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வருகை!!!

 மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் மோரேஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வருகை!

ராமநாதபுரம் மாவட்டம்,  ராமநாதபுரத்திற்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் வருகை தந்தார். மூன்று நாட்கள் ராமநாதபுரத்தில் தங்கி இருந்து அனைத்து தரப்பினரையும் சந்தித்தார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது. என்பது குறித்து ஆய்வு செய்ய வந்தேன் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவு போய் சேருகிறது என்பதை கேட்டு அறிந்து கொண்டேன்.மேலும் ஒவ்வொரு நிதி ஆண்டும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு ரூபாய் பல லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அவற்றை பெறுவதற்கு தணிக்கை ஆவணங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் உள்ளதால், அந்தந்த மாநில அரசுகளுக்கு நிதி அனுப்புவது தாமதப்படுகிறது. இந்த பிரச்சனை ராமநாதபுரத்தில் உள்ளது. ஊராட்சிகளுக்குரிய இது ஒதுக்கிய 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு அதனை பயன்படுத்த வேண்டும் இல்லை எனில் மாநில நிதியில் அபராத வட்டி வசூலித்து அதனையும் ஊராட்சிக்கு பயன்படுத்தப்படும்.  மகாராஷ்டிரா அரசு இந்த நிதியை தவறாக பயன்படுத்தியதால் அபராதவட்டி சேர்த்து பயன்படுத்த கூறியுள்ளோம். தமிழகத்தில் இதுவரை எந்த புகாரும் இல்லை. தனுஷ்கோடி சென்றேன்.

அங்கே மோடியின் ஆட்சியில் அருமையான சாலை போடப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் வீடு தோறும் குடிநீர் வழங்க கூடுதல். ஆட்சியரிடம் இந்த பணியை ஒதுக்கியுள்ளோம். அவர் அறிக்கை சமர்ப்பிப்பார். ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர் பெற பல இடங்களில் வெறும் குழாய்கள் மட்டும் பதித்துள்ளனர். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்குகிறது. அதனை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன.

தமிழகத்தில் அந்த விவரங்களை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் E.M.T.கதிரவன். மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ராமநாதபுரம் நிருபர் M.N. அன்வர் அலி, NA. ஜெரினா பானு