ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

 ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை 

கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.5 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் நீர்வழி ஓடை புறம்போக்கு நிலத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் அமைக்கும் பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்து குளக்கரை பகுதியில் புதிய மரக்கன்றுகள் நட்டார். தொடர்ந்து அரியபெருமானூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் குளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அவர் பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த பணித்தள பொறுப்பாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து அகரக்கோட்டாலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் தோண்டப்பட்டு வரும் ஊராட்சி பொதுக்கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர் தடுப்பணையில் அதிகளவு மழைநீரை சேமித்திட கரைகளை அகலப்படுத்தவும், பணியை தரமாக செய்திடவும், குடிநீர் கிணறு பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், ரங்கராஜன் மற்றும் உதவி பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்...