நமது சங்கத்தின் மாநில மாவட்ட தலைவர்கள் கவனத்திற்கு....

 நமது சங்கத்தின் மாநில மாவட்ட தலைவர்கள் கவனத்திற்கு....

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் நலனுக்காக செயல்படும் ஒரே சங்கம் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் மட்டும்தான் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.. 

இயங்குவது தான் இயக்கம் இந்த நிலையில்  நமது சங்கத்தை பாதுகாத்து மேன்மேலும் உயர்த்துவது நமக்கிருக்கும் முதலிடத்தை நாம்  தக்க வைத்துக் கொள்வது நாளும் நமது செயல்பாடுகளை துரிதப்படுத்தி வலுப்படுத்தி தூய்மைப்படுத்திட நாம் உடனடியாக கீழ்க்கண்ட பணிகளை

 ஒரு வார காலத்திற்குள் செய்து முடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறோம்..

 உங்கள் மாவட்ட சங்கத்தின் பலத்தை பலவீனத்தை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வோம்..

முதலில் மாநில மாவட்ட நிர்வாகிகள் இணைந்து  உண்மையாக செயல்படும் தலைவர்களை குக் கிராமம் முதல் மாநகரம் வரை  அடையாளம் காண்பது....

 புதிய வருங்கால தலைவர்களை இளைஞர்களை தலைமை பொறுப்புகளில் கொண்டு வருவது என்று முடிவெடுத்து இருக்கிறோம்.

 அதற்காக நீங்கள் உடனடியாக உங்கள் மாவட்டத்தில்

1.மாவட்ட தலைவர்

2..மாவட்டத் துணைத் தலைவர்கள் இரண்டு பேர்

 3..மாவட்ட செயலாளர்

4.மாவட்ட துணைச் செயலாளர் இரண்டு பேர்

5. மாவட்ட அமைப்புச் செயலாளர்.

6.மாவட்ட பொருளாளர்

7.மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரண்டு பேர்

8.மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் இரண்டு பேர்

9.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இரண்டு பேர்

10.மாநில கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவர்.

11.மாவட்ட செய்தி தொடர்பாளர் ஒருவர் என 16 பேரை தேர்வு செய்து அவர்களின் முழு முகவரியுடன் கைபேசி எண்ணுடன் புகைப்படத்துடன் இந்த whatsapp குழுவில் வெளியிட வேண்டும்.

 அதை எல்லாவற்றையும் தொகுத்து நமது சங்கத்தின் வெப்சைட்டில் நாங்கள் வெளியிடுகிறோம்..

 நமது சங்கத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் இனி இணையதளம் youtube, facebook இன்ஸ்டாகிராம் whatsapp என நமது சங்கத்தின் மாத இதழான மெட்ரிகுலேஷன் நியூஸ் இன்டர்நெட்டில்Web வார இதழாக மாற்றப்பட்டு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் உங்கள் கைகளில் தவழும் வகையில் உங்கள் பேரும் புகழும் பெருவாழ்வும் உயர்ந்து ஒளி வீச மாநில சங்கம் உங்களுக்கு உடனிருந்து உதவும்....

 எனவே இன்று முதல் உங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளி நிர்வாகிகளை நீங்கள்  நேரிலோ கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு புதிய நிர்வாகிகளை நியமித்து உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து  பள்ளி நிர்வாகிகளையும் நமது மாநில சங்கத்தில் உறுப்பினராக்கி மாவட்ட அளவிலான கல்வி கருத்தரங்குகள் கோரிக்கைகள் மாநாடுகள் தீர்மானங்கள் ஆசிரியர் பயிற்சி முகாம்கள் விருதுகள் வழங்கும் விழாக்கள் என ஏதாவது ஒன்றை அடுத்த மாதத்திற்குள் நடத்திட வேண்டும் நீங்கள் அழைத்த போது நானும் மாநில மாவட்ட தலைவர்களும் நேரில் வந்து கலந்து கொள்ள சம்மதிக்கிறோம்.

அடுத்த மாத இறுதிக்குள் நமது பல்வேறு முக்கிய கோரிக்கைகளை மையப்படுத்தி மேதகு தமிழக ஆளுநர் மாண்புமிகு தமிழக முதல்வர் மத்திய, மாநில அமைச்சர்கள், இயக்குனர் பெருமக்களோடு கலந்து கொள்ளும் மாபெரும் மாநில அளவிலான  மாநாடு தமிழக வரலாற்றின் மைல்கல்லாக தனியார் பள்ளிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும்  வண்ணமயமான மாநாட்டை நடத்திட திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்..

 நமது கனவு மெய்ப்பட நமது மாவட்ட தலைவர்கள் அனைவரும் இன்றே செயல்பட தொடங்குங்கள்

உங்கள் மாவட்ட சங்கத்தின் தலைவர்களின் புகைப்படத்தை உங்கள் வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்டால் நான் சரி பார்த்து வெப்சைட்டில் இன்றைக்கே அதை பதிவு செய்ய துவங்குகிறோம்.

 ஒரு கை ஓசை பயன் தராது... தனி மரம் தோப்பாகாது...  தங்கம் செய்யாததை நமது சங்கம் செய்யும்.... என்பதைநீங்கள் உணர்ந்து....

உடனே விரைந்து பணியாற்றுங்கள்... வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம் .

நன்றியுடன் உங்கள்

கே. ஆர். நந்தகுமார்.

 மாநில பொதுச் செயலாளர்.