"நமது மண்ணின் வரலாற்றை நாம் தான் போற்றி பாது காக்க வேண்டும்"
"வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் " ஓசூரில் நடைப்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் பொன்வண்ணன் அவர்களின் பேச்சு
இன்று(10.07.22) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஹோஸ்டியா வளாகத்தில் திரு அறம்கிருஷ்ணன் அவர்களின் "வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் " என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது . இந்த விழாவிற்கு தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் முன்னால் தொல்லியல் துறை துணை இயக்குநர் (பணி ஓய்வு)அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் திரைக்கலைஞர் ,ஓவியர், நடிகருமான திரு பொன்வண்ணன் வெளியிட ,கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவர் திரு கோமகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.மேலும் பாவலர் அறிவுமதி வெளியிட ஓசூர் பி எம் டெக் தலைவர் திரு குமார் அவர்களும் ,ஆளுநர் தேர்வு Rtn இராகவன் DGE வெளியிட திரு குகன் ஹீரா அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் திரு வணங்காமுடி,திரு வேல்முருகன் ஹோஸ்டியா தலைவர்,திரு குப்புசாமி,திரு நந்தவனம் சந்திரசேகர் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
திரு பூங்குன்றன் , திரு கோமகன்,திரு அறிவுமதி , கிருஷ்ணகிரி காபாட்சியர் திரு கோவிந்த ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
நடிகர் திரு பொன்வண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சேசும் போது...
எல்லோருக்கும் நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்திய Rtn அறம்கிருஷ்ணன் அவர்கள் பேசும் போது கடந்த எட்டு ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தான் மேற்கொண்ட களப்பயணங்கள் பற்றி விரிவாக பேசினார் வரலாற்றை பாதுகாக்கும் வகையில் ஆறு கோயில்களை புனரமைத்து வருவது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை கொண்டு மரபு நடைகளை நடத்தியது,சிதைந்து போன வரலாற்று தடயங்களை ஊர் மக்களின் உதவி கொண்டு பாதுகாப்பை ஏற்படுத்தியது போன்ற பல்வேறு செய்திகளை பற்றி பேசினார்.
இந்த நிகழ்வில் ஓசூரை சேர்ந்த திரு சுவாதி சரவணன் ஓசூர் மக்கள் சங்க தலைவர்,திரு ஶ்ரீதர் பரிமளம் பள்ளி தாளாளர் , டாக்டர் சண்முகவேல் ,திரு ஜெகநாதன்,Rtn தர்மேஷ் பட்டேல் PDG, ஆடிட்டர் ராகவன்,அரிமா ரவிவர்மா, ஆகியார் கலந்து கொண்டனர்.
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வரலாற்று குழுக்களை சேர்ந்த நண்பர்களும்,ஓசூர் அறம் இலக்கிய அமைப்பு, அறம் வராற்று ஆய்வு மையம், ஓசூர் எலைட் ரோட்டரி சங்க சேர்ந்த நண்பர்களும் விழாவில் கலந்து கொண்டு விழா சிறக்க ஒத்துழைப்பு வழங்கினர்.
வரவேற்புரை அ.க. இராசு,தொகுப்புரை மு. பாலாஜி மற்றும் திருமதி மணிமேகலை மற்றும் மா.முருகுகுமரன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினர்
விழா குழுவினர்கள் திரு கருமலைத் தமிழாழன்,திரு சிவந்தி அருணாசலம் ,திரு பிரியன்,திரு கணபதி,திரு மஞ்சுநாத்,திரு வே சிவக்குமார் ,திரு காமராஜ்,திரு செம்பரிதி,திரு சத்திய மூர்த்தி, திரு சாய்ராம்,திரு ராஜேஷ்,திரு சங்கர் பாபு,திரு வெங்டாசலபதி
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த பத்து தொலைக்காட்சி நண்பர்களுக்கும் ,பத்து பத்திரிகை நண்பர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டு செய்யப்பட்டது
Rtn அறம்கிருஷ்ணன்
நூல் ஆசிரியர் மற்றும் தலைவர் ஓசூர் அறம் வரலாற்று ஆய்வு மையம்