நாளை 09.07.2022 காலை 10.30 மணிக்கு பாலக்கோட்டில் பள்ளி வாகனங்கள் ஆய்வு....

 நாளை 09.07.2022 காலை 10.30 மணிக்கு பாலக்கோட்டில் பள்ளி வாகனங்கள் ஆய்வு....


தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012, விதி 11- ன்படி ஒவ்வொரு வருடமும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ய  மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவின் தலைவர் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உறுப்பினர்களாக  வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,  துணை காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர்/ மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -1 ஆகியோர் உள்ளனர். 

இக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் பொதுவான ஓர் இடத்தில் வாகனங்களின் தகுதி குறித்து கூட்டு ஆய்வு மேற்கொள்வர்.

இந்த குழு கடந்த சனிக்கிழமை தர்மபுரியில் இதற்கான ஆய்வை நடத்தியது. அப்போது பாலக்கோடு பகுதியில் இருந்து பல வாகனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை.  எனவே பாலக்கோடு பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வாகனங்களை மீண்டும் மறு ஆய்வு செய்ய சொல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இதற்கான ஆய்வு நாளை 09. 07 2022 சனிக்கிழமை  10:30 மணிக்கு பாலக்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளி தாளாளர்களும் பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பாலக்கோடு வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் வெங்கிட்டுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆய்வுக்கு வரும் போது பள்ளி வாகனங்களில் ஆர்.சி. புத்தகம், பர்மிட் கார்டு,  வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் பள்ளிக்   கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட அங்கீகார நகல் ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.