ஒசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் மற்றும் நடைபயிற்சி போட்டிகள் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஒசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் மற்றும் நடைபயிற்சி போட்டிகள் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



ஒசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் மனித வளம் காப்போம் என்ற தலைப்பில் மாரத்தான், மொத்தம் நடைப்பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. இதில் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒசூர் ஹில்ஸ் ஒட்டல் வளாகத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டிகளை ஓசூர் கோட்ட்சியர் தேன்மொழி கொடியசைத்து துவக்கி வைத்தார். 10 கி.மீ ஆண்கள் பெண்கள், 5 கி.மீ ஆண்கள் பெண்கள் பங்கேற்கும் விதமாக மொத்தம் 4 பிரிவுகளாக இந்த மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பங்கேற்கும் வகையில் 5 கி.மீ நடைபயிற்சி போட்டிகளும் நடைபெற்றன.

இந்த போட்டிகளை லயன்ஸ் கிளப் ஆப் ஓசூர் சிப்காட், என் எச் ஆர் டி ஒசூர் மற்றும் ஐ எம் ஏ ஒசூர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. போட்டிகள் அனைத்தும் ஒசூர் ஒட்டல் ஹில்ஸ் வளாகத்தில் துவங்கி ஒசூர் முதல் சிப்காட் வளாக சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஹில்ஸ் ஒட்டலில் வந்து நிறைவடைந்தது. இந்த போட்டிகளில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் 10 கி.மீ தூரத்தை 31.25 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்த சோமசேகர் பிரகாஷ் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது, அதேபோல பெண்கள் பிரிவில் 10 கி.மீ தூரத்தை 38.58 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்த அர்ச்சனா என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 

அதேபோல 5 கிமீ தூர மாரத்தானில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த அஸ்தோஸ் பிரனேஷ் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பரிசுகள், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த பண்டு தன்யாஸ்ரீ என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல  மாரத்தான் போட்டிகளில் 2 மற்றும் 3 ஆம் இடங்களை பிடித்தவர்களுக்கும் ரொக்கப் பணம் மற்றும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  

இந்த நிகழ்வில் ஒசூர் கோட்டாச்சியர் தேன்மொழி, ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மேயர் சத்யா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகளை நடவு செய்து பரிசுகளை வழங்கினர்.

ஓசூர் செய்தியாளர்: E.V.பழனியப்பன்