ஓசூரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழா :

 ஓசூரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழா 

ஓசூரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழா : விநாயகர் கோயிலில் பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு ஓசூரில் பாஜக மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமையில் ஓசூர் காந்தி சிலை அருகில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பாபு, ஊடகத்துறை மாவட்ட தலைவர் மல்லேஷ்ரெட்டி, தங்கராஜ் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர்: E V. பழனியப்பன்