கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம்

 கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம்

*ஓசூரில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம். ஆதி சிவலிங்காச்சாரிய பீட ஆதீனம் தலைமையில் நடைபெற்றது.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுமார் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுர மகா கும்பாபிஷேக வைபவம் நாளை காலை ஏழு மணி 30 நிமிடத்திற்கு நடைபெற உள்ளது. இம் மாதம் 1ஆம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் நேற்றும் இன்றும், மகா யாக சாலைகள் அமைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றது. இந்த திருக்கோவில் ராஜகோபுரம் ஆனது பல ஆண்டுகளாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்து ஐந்து நிலைகளில் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்டு சுதைச் சிற்பங்கள் உடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 


இதற்கான மகா கும்பாபிஷேக வைபவ ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், முன்னாள் எம்எல்ஏ, கே கோபிநாத், கே ஜெய்சங்கர், ஆறுமுகம் உள்ளிட்டோர் இடம் திருக் கோயிலின் பரம்பரை பூசாரி ஸ்ரீதர் சுவாமிகள் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்துள்ளனர். 

இந்த மகா கும்பாபிஷேகம் ஆனது, திருவண்ணாமலை, காந்தபாளையம் சீந்தல் மடாலயம், ஸ்ரீ ஆதி சிவலிங்க ஆச்சாரிய சுவாமிகள் 65வது மடாதிபதியும் ஸ்ரீமத் பரமாச்சாரியார் கோளரினாத ஆதீனம் ,39வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவராஜ ஞானாச்சாரியார் சுவாமிகளும், இளைய பட்டம் ஸ்ரீ-ல-ஸ்ரீ ஞானசேகரன் ஆகியோர் குழுவினருடன் வேத மந்திரங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.

ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்