கிறிஸ்தவ தேவாலயங்களில் அடாவடியாக நுழைந்து கலகம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை....!
கிறிஸ்தவ தேவாலயங்களில் அடாவடியாக நுழைந்து கலகம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கபட்ட கிறிஸ்தவர்களுக்கு மனித உரிமை கழகம்கம் துணை நிற்கும்:மனித உரிமை கழக மாநில தலைவர் சுரேஷ் கண்ணன் தெரிவிததுள்ளார்
மனித உரிமை கழகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்நடைபெற்ற கூட்டத்தில்
மனித உரிமை கழகத்தின் மாநில தலைவர் சுரேஷ் கண்ணன் பங்கேற்றார் அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் நிர்வாகிகள் அவருக்கு
சால்வை அணிவித்தும் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதையடுத்து நிருபர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்
பொதுமக்களை பாதிக்கும் மனித உரிமை மீறல்களை எங்கள் இயக்கத்தினர் கண்காணித்து அதை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து
தீர்வு காண்கின்றனர்.
மனித உரிமைகள் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் இலங்கை அரசிற்கு உதவி செய்ய சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளோம்.
திருவாடு துறைஆதீனத்திற்கு பல்லாக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி தரவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
எங்கள் அமைப்பின் சார்பில் நகரம். ஒன்றியம். பேரூராட்சி, போன்ற பகுதிகளில் உள்ள பொறுப்பாளர்கள் அங்கு நடைபெறுகிற மனித உரிமை மீறல்களை 48 மணி நேரத்திற்குள் சரிசெய்கறார்கள்
பெரும் பிரச்சனை என்றால் மாநில மனித உரிமை ஆணைய அதைக் கொண்டு சென்று அதற்கு தீர்வு காண்போம்.
தேவாலயங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அடாவடியாக உள்ளே நுழைந்துபிரார்த்தனைகள் நடக்க தடை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் கழகம் துணை நிற்கும்
என்று கூறினார்
இந்த நிகழ்ச்சியின்போது
மாநிலஇணைச் செயலாளர் பர்கூர் சரவணன்.
கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வினோத். ஓசூர் தொகுதி செயலாளர் தியாகராஜன்.
தளி பொறுப்பாளர் குரு. வேப்பனஹள்ளி துணைச்செயலாளர் சுந்தர்ராஜ்.
கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் உதயகுமார் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம்.
மாநில துணை செயலாளர்தமிழகன். பர்கூர் தொகுதி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி