முதல்வர் ஸ்டாலினின் உயிருக்கு குறி வைத்த துரைமுருகன்

 முதல்வர் ஸ்டாலினின் உயிருக்கு குறி வைத்த துரைமுருகன்

நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என்று எனக்கு தெரியாது, ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். 

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில்  110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் அதிமுக தவிர்த்து பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பாராட்டி பேசினர். அப்போது பேசிய துரைமுருகன்,  கடந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் செய்த பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு பேசினார். 

அப்பாவையே தோற்கடித்த மகனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்.எங்களோடு கலந்து பேசி இருந்தால் கூட நாங்கள் எதாவது பேசி குழப்பி இருப்போம். தனி ஒருவராக அவர் சிந்தித்து முடிவெடுத்ததால் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். உங்களை வெல்வதற்கு எவராலும் முடியாது.திட்டங்களை தீட்டுவதில் அவற்றை செயல்படுத்துவதில் முதலமைச்சருக்கு திருப்தி ஏற்படுவதில்லை. தண்ணீர் வர வர ஏரி, குளங்கள் நிரம்பி விடும். ஆனால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடல் நிரம்பாது ஏற்றுக்கொள்ளும்.

கடல் போல திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் முதலமைச்சரை பிடிக்காத ஆட்கள் யாருமே கிடையாது. டிவியில் பார்த்தால் சிறுவர்கள் குதூகலிக்கிறார்கள்.சாலையில் செல்லும் போது யாராவது சாதாரண ஏழை மனு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்த தனி மனிதனிடமும் மனுவை பெறும் மகத்தான குணத்தை கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஓடாத தேரையே ஓட வைத்தவர் கலைஞர், செயல்படாத கவர்னரையே செயல்பட வைத்தவர் முதலமைச்சர். ஆட்சி போகும் வரும், ஆனால் திராவிட இயக்க இருக்க வேண்டும். திராவிட இயக்க பற்றுடன் இருப்பவன் நான்.

திராவிட இயக்கத்தை காப்பற்றும் ஒரு ஆண் மகனாக நீங்கள்( முதல்வரை குறிப்பிட்டு) பிறந்திருப்பதில். எனக்கு மகிழ்ச்சி.  தான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என  பேரவையில் உருக்கமாக பேசினார். 

துரைமுருகனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ஒருமுறை கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னுடைய ஆயுளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். என்னுடைய மார்பில் உங்களுடைய கண்ணீர் துளி விழ வேண்டும் என்று உருக்கமாக பேசிய துரைமுருகன் இப்போது ஸ்டாலினை பார்த்து     இதே டயலாக் பேசி உள்ளார்.  இதனால் உடன்பிறப்புக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இவர் முதல் அமைச்சர் ஸ்டாலின் மீது இருக்கும் அன்பால் பேசினாரா....? இல்லை இதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.