ஒகேனக்கலில் பொதுமக்கள் குளிக்க தடை...!

 ஒகேனக்கலில் பொதுமக்கள் குளிக்க தடை...!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  இன்று (18.05.2022) காலை 6.00 மணி நிலவரப்படி சுமார் 20,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றின் எந்தவொரு பகுதிக்கும் செல்லவோ ஆற்றில் இறங்கி குளிக்கவோ, அருவியில் குளிக்கவோ ஆற்றை கடக்கவோ,  ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ மற்றும் படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ இன்று.(18.05.2022) புதன்கிழமை காலை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப் படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.