பொதுத் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆப்சென்ட்: அலட்சிய போக்கிற்கு யார் காரணம்...?

பொதுத் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆப்சென்ட்:   அலட்சிய போக்கிற்கு யார் காரணம்...?


தமிழகத்தில் தற்போது 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வரும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்காத 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. 10ம் வகுப்புகளுக்கு மே 6ம் தேதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆன மாணவர்களின் எண்ணிக்கை 1.18 லட்சமாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு பயிலும் 12 லட்சம் பேரில் 42,000 பேரும் 11ம் வகுப்பில் தேர்வு எழுதிய 9 லட்சம் பேரில் 43,533 பேரும் 12ம் வகுப்பில் 10 லட்சம் பேரில் 1,18,133 மாணவர்களும் ஆக மொத்தம் சுமார் 2 லட்சம் மாணவர்களும் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். கொரோனாவிற்கு முன்பு வரை நடந்த அரசு தேர்வுகளில் இறப்பு, இடைநிற்றல் போன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வை எழுதாமல் இருப்பர்.

ஆனால் இந்த வருடம் தேர்வு எழுத தகுதி பெற்ற 31 லட்சம் பேரில்  சுமார் 2 லட்சம்  மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த நிலையில் தேர்வுக்கு ஆப்சென்ட் ஆன மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு ஜூலை மாதத்தில் உடனடி தேர்வுகள் நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்கள் விபரம், வேலைக்கு சென்றால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வருதல், பிற காரணங்களை அறிந்து பள்ளிக்கு வர வைத்தல் மற்றும் விவரங்களை சேகரிக்கும் பணிகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பொதுத் தேர்வில் வரலாறு காணாத அளவில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் Absent ஆனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. 

ஒட்டுமொத்தமாக இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பதற்கு காரணமே இவர்கள் யாரும் பள்ளிக்கு  வந்தும் வராமலும் இல்லை. கொரோன    ஊரடங்களிலிருந்து மொத்தமாகவே பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள் தான்.

இவர்கள்அனைவரும் மொத்தமாகவே இடையில் நின்று விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 18 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடியே இருந்ததால் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படித்து வந்த பல மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள். இப்படி சம்பாதிக்க தொடங்கிய அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து படிக்க வைப்பது என்பது இயலாத காரியம்.

இது ஒருவகையான ட்ராப் அவுட் என்று சொன்னாலும் இந்த Corona காலத்தில்  ஏகப்பட்ட இளம் வயது திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இப்படி திருமணம் செய்து கொண்ட பலர் குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். 

இன்னும் சிலர் ஊரை விட்டு  ஓடிப்போய் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு சமூக விரோதிகளாக மாறி விட்டிருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் அனைத்தும் அரசு பள்ளி வருகைப் பதிவேட்டில் இருந்து நீக்காமல் இருப்பதும் வராமல் இருந்த மாணவர்களுக்கு Attendance  போட்டு ஏமாற்றியதும் தான் இவ்வளவு மாணவர்கள் பொதுத்தேர்வில் மட்டம் போடுவதற்கு காரணம். 10, 11, 12ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதாமல் இருக்கின்ற சுமார் இரண்டு லட்சம் மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள்தான். தனியார் பள்ளிகளில் இவ்வளவு மாணவர்கள் Absent ஆவதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை. 

காரணம் இங்கு இந்த மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருகிறார்களா இல்லையா என்று கண்காணிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தினசரி வருகை புரிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வில் அனுமதிக்கப்படுகிறார்கள்.  பள்ளிக்கு ஒழுங்காக வந்த மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வெழுத வைத்துள்ளனர்.

ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்த கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.  தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. எப்படியும் ஆல் பாஸ் தானே...! என்கிற அலட்சியப் போக்கு நிலவியது ஒரு மிகப்பெரிய முக்கிய காரணம். மாணவன் பள்ளிக்கு வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி ஆல் பாஸ் கொடுத்து அனுப்பி விடலாம் என்று அலட்சிய போக்கோடு இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் இவ்வளவு பெரிய பின்னடைவுக்கு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எனவே இவர்களுக்கு மறுத்தேர்வு நடத்தலாம் என்ற முயற்சிப்பது என்பது வீண் வேலை.  பள்ளிக்கல்வித்துறை இனியாவது விழிப்போடு இருந்து இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்ப்பது நாளைய தலைமுறைக்கு நல்லது.