அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்....

 அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்....


தமிழக அரசே  !

 தமிழக அரசு  பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்வி கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யக் கோரி

மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்....

 பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, பி.எட்.. கல்லூரி,

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளது போல்....

தனியார் பள்ளிகளுக்கும் நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்,..

 அவ்வாறு நிர்ணயிக்க இயலவில்லை என்றால் தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவை கலைத்துவிடு...

 இடம்.. தனியார் பள்ளி கல்வி கட்டணம் நிர்ணய குழு  அலுவலகம் முன்பு....

 டி..பி.ஐ. வளாகம் சென்னை-6

நாள்...18.04.2022

 திங்கட்கிழமை காலை சரியாக 11 மணி முதல் 12 மணிவரை...

 12 மணிக்கு கட்டண நிர்ணயக் குழு தலைவர் மாண்புமிகு.நீதியரசர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்குதல்....

 தலைமை...

கே ஆர் நந்தகுமார்.. மாநிலச் செயலாளர்..தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்..

 பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொண்டு நமது நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற ஆதரவு தாரீர்....

 மேற்கண்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அனைத்து பள்ளி நிர்வாகிகளும்

சங்கத் தலைவர்களும் உங்கள் பெயர்களை போட்டு அச்சடித்து உங்கள் ஊர்களில் மாவட்டங்களில் உடனடியாக சுவர்களில் ஒட்டி எனக்கு வாட்ஸ் அப் மூலம் படமெடுத்து அனுப்பவும்.. கல்வி கட்டணம் குறைய குறைய ஆர். டி. இ. கட்டணமும் குறைந்து விடும் கவனமாக இருங்கள் 

உடனடியாக அரசின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும்.

 அதற்காக இன்றே இப்பொழுதே பணியாற்றிட வேண்டும்  என்று அன்போடு வேண்டுகிறேன்..

 இது மிக மிக அவசரம் காலத்தின் கட்டாயம்..

மக்கள் சக்தியே  மகத்தான சக்தி என்பதை நிரூபிக்க அணிதிரண்டு வாரீர்...

 மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் முறையிடுவோம்..

 நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் எதிரொலிக்க நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு செயலாற்றுங்கள் வெற்றி பெறலாம்.

அன்புடன் உங்கள்்

 கே. ஆர்.நந்தகுமார் மாநிலச் செயலாளர்..