தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை முழுமையாக அல்ல ஸ்டாலின் புது திட்டம்...!

தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை முழுமையாக அல்ல ஸ்டாலின் புது திட்டம்...!

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாட திமுகவினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் இன்று அறிவித்துள்ளேன்.

சமத்துவ நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு,  ஏப்ரல் 14 அன்று கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டக்கழக அலுவலகங்களிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 238 சமத்துவபுரங்களிலும் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலையை முன் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களது திருவுருவப்படத்தை வைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழகத்தினர் மரியாதை செலுத்தி சமத்துவ நாளைக் கொண்டாடிட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதன்படி இத்தனை நாட்கள் இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் தெருவெங்கும் கட்சி கொடி கட்டி அம்பேத்கர் சிலைகளுக்கும் அம்பேத்கர் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

என்ன இது புது பழக்கம் ஆச்சரியமாக இருக்கிறது என்று கேட்கலாம்.  எல்லாவற்றுக்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது.

 பொதுவாக தலித் இயக்கங்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நிறைய கட்சிகள் இருக்கின்றன.  ஆனால் எந்த இயக்கமும் பெரிதாக சோபிக்கவில்லை.  

காரணம் அவர்கள் கட்சி பெயரில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசம் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதால் பெரும்பான்மையான அவர்களின் இனத்தை சார்ந்த மக்கள் அவர்கள் இயக்கங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை இதனால் அவர்களின் சாதிய ஓட்டுக்களை ஒன்றிணைக்க அவர்களால் இயலவில்லை.

ஜாதிய அடிப்படையில் அவர்கள் பெரும் கூட்டமாக இருந்தாலும் அவர்களின் வாக்கு வங்கி ஒன்றாக இருந்ததில்லை. தமிழகத்தை பொறுத்தவரை அவர்கள் வாக்குகள் பெரும்பான்மையாக இதுவரை அதிமுகவிற்கு மட்டுமே கிடைத்து வந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது இந்த வாக்கு வங்கியை உடைப்பதற்கு தான் இந்த திட்டம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்