19.03.22 சனிக்கிழமை தர்மபுரி கடத்தூரில் தனியார் பள்ளி நிர்வாகிகள், சங்க தலைவர்களின் மிக முக்கியமான அவசர ஆலோசனை கூட்டம்...

 19.03.22 சனிக்கிழமை தர்மபுரி கடத்தூரில் தனியார் பள்ளி நிர்வாகிகள், சங்க தலைவர்களின் மிக முக்கியமான அவசர ஆலோசனை கூட்டம்...


 தமிழ்நாடு நர்சரி  பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில்

கடத்தூர் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில்  (19.03.22) சனிக்கிழமை  காலை  சரியாக 10.30 மணி முதல்12.30.மணி வரை 

 நமது மாநில சங்கத்தின் மாநிலத் துணைத்  தலைவர் திரு.  பச்சமுத்து பாஸ்கர் அவர்களின் தலைமையில்...

 திருவாளர்கள்.. மெட்ரிகுலேசன் நியூஸ் ஆசிரியர் கே. ஆர். ரவிச்சந்திரன். பாலாஜி ஹைடெக் பள்ளி  குணசேகரன்.. சாந்தினி செந்தில்குமார். ஆகியோர் முன்னிலையில் ...


 கிரீன் பார்க்  மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளியின் நிர்வாகி திரு. முனிரத்தினம். மாவட்டத்தலைவர் (மெட்ரிக் பள்ளிகள்) அவர்கள் வரவேற்புரை  ஆற்றிட 

 மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.திரு. கே.ஆர். நந்தகுமார் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்..

  தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைகளை கேட்டு  மிக முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளதால்

அனைத்து பள்ளிகளும் கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கி விட்டீர்களா?

நீங்கள் வசூலித்த கல்வி கட்டணம்  எவ்வளவு?

 எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளீர்கள்... என்கிற பட்டியலை DEO., CEO அலுவலகங்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

 அதேபோல் எவ்வளவு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

இன்னும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கவில்லை.

நிர்ணயித்த கட்டணம் சென்ற ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைத்து கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளனர் என்பதுதான் உண்மை..

 அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை குறைத்துதான் ஆர்டிஇ கல்வி கட்டணம் வழங்கப்படுகிறது.

அதிலும் இந்தாண்டு 25 சதவீதம் குறைத்து விட்டார்கள்.

நிலுவையில் உள்ள ஆர் டி இ  25% கல்வி கட்டணத்துடன் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை  பெறுவதற்காகவும்

சொத்து வரியை உடனடியாக கட்டச் சொல்லி பள்ளிகளின் குடிநீர் இணைப்பு மின் இணைப்பைத் துண்டிப்பது சாக்கடைகளை அடைப்பது பள்ளிகளுக்கு சீல் வைப்பது ஜப்தி வரை ஊராட்சி நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி அதிகாரிகள் வந்துள்ளதை தடுத்து நிறுத்திட...

அனைத்து பள்ளிகளுக்கும் மூன்றாண்டு அங்கீகாரம் வழங்காமல் ஓராண்டு அங்கீகாரம் வழங்குவதை தடுத்து நிறுத்தி...மூன்றாண்டு அங்கீகாரம் உடனடியாக பெற்றிட...

 அங்கீகாரம் பெற்று பத்தாண்டுகளான அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் கிடைத்திட...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 

நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்கவும்

 அரசு கலைக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, பிஎட் கல்லூரி  பாலிடெக்னிக், ஐடிஐ போல்  அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயமான  கல்வி கட்டணம் நிர்ணயிக்கவும்...

 தனியார் பள்ளி வாகன பிரச்சனைகளை தீர்த்திட....

 நமது மாநில சங்கத்தின் சேலம் மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்திட....

 சேலம்  மாவட்ட அனைத்து பள்ளி  நிர்வாகிகளும் சங்க பேதம் மறந்து பள்ளி நிர்வாகிகளின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு  அனைத்து  சங்கத் தலைவர்களும் தவறாமல் நேரில் வந்து கலந்து கொண்டு தங்கள் மேலான  கருத்துக்களை தந்து தனியார் பள்ளிகளை பாதுகாத்து உயர்த்திட வேண்டுமாய் அன்போடு இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.

 இது மிக முக்கியமான கூட்டம் என்பதால்  பள்ளி நிர்வாகிகள் தவறாமல் நேரில் வந்து  கலந்துகொண்டு தங்கள் மேலான கருத்துக்களை தரவேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன்.

 வாருங்கள் நல்ல கருத்துக்களை தாருங்கள்

அன்புடன் உங்கள்

கே. ஆர்..நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் மற்றும் தர்மபுரி  மாவட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ  பள்ளிகள் சங்க நிர்வாகிகள்.