2.15கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை அமைச்சர்கள் த.மோ.அன்பரசன், காந்தி வழங்கினர்.

 2.15கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை அமைச்சர்கள்  த.மோ.அன்பரசன், காந்தி   வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு இடங்களில் பட்டுவளர்ச்சித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு  அமைச்சர்கள் வருகை தந்தனர்..

ஒசூர் மாநகராட்சி ராம் நகர் பகுதியிலுள்ள பட்டுவளர்ச்சி அலுவலகத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 689 பட்டு விவசாயிகளுக்கு 2.15கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர்  த.மோ.அன்பரசன், கைத்தறி அமைச்சர் காந்தி ஆகிய இரண்டு அமைச்சர்கள் வழங்கினர்..

இந்த நிகழ்ச்சியில் தளி,ஒசூர்,பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்..

கூட்டத்தில் ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் பேசியபோது திடீரென மின்தடை ஏற்ப்பட்டது, மின் ஊழியர்கள் மின்தடை சீர்செய்ய 15 நிமிடங்கள் வரை தாமதமானதால் மேடையில் பேச முடியாமல் நின்ற எம்எல்ஏ செய்வதறியாமல் திகைத்தார்

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பரசன்:

தமிழகத்தில் பட்டு வளர்ப்பை அதிகப்படுத்தவும், தேவையை பூர்த்தி செய்ய 3700 ஏக்கருக்கு வழங்கப்பட்ட மானியம், 5000 ஏக்கர் நிலமாக அதிகரித்தும் பட்டுப்புழு வளர்க்க செட்டு அமைக்கப்பட 87 ஆயிரம் ரூபாய் நிதியை தற்போதைய தமிழக அரசு 1,20,000 ரூபாய் வரை அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

நீட் தேர்வு இரத்து செய்யப்படுமா? என்கிற கேள்விக்கு:

எவ்வளவு பெரிய கேள்வி, முதல்வர் ஆளுநரை சந்தித்துள்ளார்.

நீட்தேர்வு இரத்து என்பது நாடகம் என பாஜக அண்ணாமலை கூறியிருப்பதை கேட்டதற்கு: அவர்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது என கூறினார்.

ஓசூர் செய்தியாளர் E.V.பழனியப்பன்