ராமநாதபுரம் நகர்மன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர்கள், MP. MLA,பிரச்சாரம்!!!

 ராமநாதபுரம் நகர்மன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர்கள், MP. MLA,பிரச்சாரம்!

ராமநாதபுரம் பிப்-14

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர்மன்ற மதச்சார்பற்ற முற்போக்கு திமுககூட்டணி சார்பில் 33 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பும், சின்னக்கடை தெருவிலும் ஆகிய இரண்டு இடங்களிலும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் உள்ளிட்டோர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் 1வது வார்டு செல்லமணி, 3வது வார்டிற்கு                      . S.மங்கையர்கரசி, 14வது வார்டிற்கு சபுரா, 16வது வார்டிற்கு                       J.ஜெயராமன், 18வது வார்டிற்கு SAG.மணிகண்டன், 19வது வார்டிற்கு சபிக்கா பானு,  22வது வார்டிற்கு மஞ்சுளா, 29வது வார்டிற்கு         K.காயத்ரி, 30வது வார்டு R.K.கார்மேகம் (நகர் செயலாளர்), 31வது வார்டிற்கு சிராஜுதீன் உள்ளிட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் தமிழகத்தில் நடைபெற்று வரும்     மு.க.ஸ்டாலின்  தலைமையிலான நல்லாட்சி உள்ளாட்சியில் தொடர வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்ராமநாதபுரம் நகர (வடக்கு) திமுக செயலாளர் R.K.கார்மேகம், (தெற்கு) நகர செயலாளர் T.R.பிரவீன் தங்கம், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், மற்றும் வேட்பாளர்கள் தோழமை கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு