மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப்பள்ளி தலைமையாசிரியர் கைது!!

 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த  அரசுப்பள்ளி தலைமையாசிரியர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்  மேலும் அவர் மீது பணியிடைநீக்க நடவடிக்கையும் பாய்ந்தது திருவண்ணாமலை மாவட்டம்  கலசபாக்கம் அடுத்த தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்  பள்ளி தலைமையாசிரியராக காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் வயது 55 என்பவர் உள்ளார் சுமதி என்பவர் உதவி ஆசிரியராக உள்ளார். 

 கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது  அன்று முதல் தலைமையாசிரியர் காளியப்பன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது  இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர்  இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செவ்வாய்க்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் தலைமையாசிரியரை கண்டித்து போளூர்-மேல்சோழங்குப்பம் சாலையில் மாணவர்களுடன் பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதுகுறித்து தகவலறிந்த போளூர் டிஎஸ்பி குணசேகரன், கலசபாக்கம் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், போளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா, வட்டார கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது  தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டார கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள்  பொதுமக்கள் மனு அளித்தனர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து  சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்  தொடர்ந்து கலசபாக்கம் வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர் காளியப்பனிடம், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் விசாரணை நடத்தினார்  தலைமையாசிரியர் காளியப்பன் மீது குற்றம் நிரூபனமானதால்  அவரை பணியிடை நீக்கம் செய்து போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் உத்தரவிட்டார் இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமையாசிரியர் காளியப்பனை கைது செய்துய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருட்செல்வத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மேலும், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக வேறு பள்ளியில் இருந்து ஆசிரியரை நியமித்து புதன்கிழமை முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.