பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்த அறிவித்த தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்த அறிவித்த தமிழக அரசுக்கு  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்த அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி  மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..

 வரும் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் போதே நமது மாநில சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு முழுக்க சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து சுவரொட்டிகள் ஒட்டி பத்திரிகையாளரிடம் ஊடகவியலாளர்களிடம் செய்திகளாக வெளியிட்டு அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததும் கோரிக்கைவைத்ததும் நமது சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்திற்கான பணிகளைத் தீவிரமாக செய்து வந்தனர் இந்த நிலையில்.

 எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கிய மாண்புமிகு. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும்.. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்

பள்ளி கல்வித் துறை ஆணையாளர் இயக்குனர் பெருமக்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் எங்கள் மாநில சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கிட வேண்டும்.

 எங்கள் கோரிக்கையை ஏற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையோடு அரசு தந்த  அறிவிப்பை ஏற்று வரும் 31ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்திட  எங்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்கிற தகவலை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

 நமது சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பள்ளி  நிர்வாகிகள் அரசின் அறிவிப்பை ஏற்று உடனடியாகபள்ளிகளை துவங்க வேண்டிய பணிகளை நோய் தடுப்பு நடவடிக்கைகள்சமூக இடைவெளி கடைபிடித்து பிள்ளைகளை பாதுகாத்துதரமான கல்வி தந்து தமிழகத்தை

உயர்த்திட வேண்டிய பணிகளை உடனே தொடங்குங்கள். 

நன்றியுடன் உங்கள் கே. ஆர்.நந்த குமார் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள்.