கே. நவாஸ்கனி M.P. மாணவ மாணவிகளுக்கு வழங்கிய ரூபாய் ஒரு கோடியே 41 லட்சம் உயர் கல்விக்கான உதவித்தொகை.

கே. நவாஸ்கனி M.P.  மாணவ மாணவிகளுக்கு வழங்கிய ரூபாய் ஒரு கோடியே 41 லட்சம்  உயர் கல்விக்கான உதவித்தொகை. 

ராமநாதபுரம் டிச-05

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே. நவாஸ்கனி அவர்கள் மாணவ மாணவிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 41 லட்சம் உயர் கல்வி தொகை வழங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி எம்பி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். முதலாம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கி மகிழ்ந்தார். இந்த ஆண்டு 600க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர முடியாத மாணவ மாணவிகளுக்கு ஏழை எளிய மாணவர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 41 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவி தொகை ராமநாதபுரம் பி.கே. நவாஸ்கனி தன்னுடைய சொந்த நிதியிலிருந்து வழங்கினார். உயர் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் கேணிக்கரை யிலுள்ள மஹாலில் நடைபெற்றது,

 இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் கூடுதல் ஆட்சித் தலைவர்  K.J.பிரவீன்குமார், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர் திரு. கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், பரமக்குடி முருகேசன், எம்எல்ஏ, திருவாடானை கரியமாணிக்கம், எம்எல்ஏ, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ் ஷாஜஹான், மாநில துணைச்செயலாளர் இப்ராகிம் மக்கி, மாநில செயலாளர் நிஜாம் தீன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், எஸ்டி கூரியர் நிறுவனத்தலைவர் டாக்டர் திரு.அன்சாரி, எஸ்டி கூரியர் இணை நிர்வாக இயக்குனர் திரு.சிராஜ்தீன்,திமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மாவீரன் வேலுச்சாமி, திருப்புல்லாணி ஒன்றியக்குழு பெருந்தலைவர் எஸ். புல்லாணி மற்றும் ராமேஸ்வரம் நகர் செயலாளர் நாசர்கான்,தமுமுக மாநில செயலாளர் சலீம் முல்லா கான்,ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க (கிழக்கு) மாவட்ட செயலாளர் திரு .பட்டாணி மீரான்,  மற்றும் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் திரு. செல்லத்துரை அப்துல்லா,மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முஹம்மது,மாவட்ட செயலாளர் முகம்மது பைசல்,மாநில ஊடகப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சிராஜ்தீன்,நகர செயலாளர் ஹதியத் துல்லா, ஆசிக் உசேன், மாவட்ட துணைத் தலைவர் சாதுல்லா கான்,குருவாடி அன்சாரி,ஏர்வாடி நகர் தலைவர் நல்பாதுஷா, ராமநாதபுரம் பாசிப்பட்டரைத் தெரு மேனேஜிங் டிரஸ்டி திரு.அசரப் அலி,ஜமாத் செயலாளர் ஜவாஹிருல்லா, சிறுத்தை முத்துவாப்பா, மற்றும் ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஆலம், திமுக நகர. செயலாளர்கள் கே. கார்மேகம், பிரவீன் தங்கம், திமுக விழா குழு செயலாளர் 0.M.S.மஹாதிர் அபிமான், மற்றும் பவர் குரூப் சேர்மன் முகம்மது ஜாகீர்உசேன், தொழிலதிபர் A. தாருதீன், மதுரை ஜமாஅத்தார்கள். இ.யூ.மு.லீக் மாவட்ட ஊடகப்பிரிவு அமைப்பாளர் சலாகுதீன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் எஸ்டி கூரியர் ஊழியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு இந்த சிறப்பான கடனுதவி தொகைவழங்கும் விழாவினை சிறப்பித்தார்கள். சிறப்பான இவ் விழாவினை தொகுத்து வழங்கியவர் முன்னாள் தாசிம் பீவி பெண்கள் கல்லூரியின் துணை முதல்வர் சுலேகா தொகுத்து வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு