மலேசியாவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ள கணவரை மீட்டு தரக்கோரி மனைவி மனு!!
ராமநாதபுரம் டிச-22
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வலையர் தெருவைச் சேர்ந்தவர் சௌந்திரபாண்டியன் இவரது மனைவி முத்துலட்சுமி இவர் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் அவர்களிடம் அலுவலகத்திற்கு வந்து குடும்பத்தினருடன் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் சௌந்தரபாண்டியன் மலேசியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஊருக்கு வந்து விட்டுச் சென்று அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.கடந்த 12ஆம் தேதி இரவு கடைசியாக பேசிய போது நன்றாக உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து பேசிய நபர் ஒருவர் எனது கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து எனது கணவரை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை., எங்களுக்கு தகவல் தெரிவித்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை இதனால் எனது கணவருக்கு என்ன ஆனது அவரின் தற்போதைய நிலை என்ன என்பது தெரியாமல் தவித்து வருகிறோம் எனவே எனது கணவரின் நிலையை கண்டறிந்து அவரை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அரசு கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு