தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்....!

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்....!

டிச-21

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்த்த போதும், எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேற்றிய இம்மசோதாவை  ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான 

கே.நவாஸ்கனி எம்பி வலியுறுத்தல்..

இதுகுறித்து நவாஸ்கனி எம்பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. 

மக்களவையில் இன்று எந்த வித விவாதமும் இல்லாமல் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது.

எதிர்க்கட்சிகள், இச்சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்திய போதே எதிர்த்த போதும், எந்த விவாதத்திற்கும் அனுமதி அளிக்காமல் தேர்தல் சட்டங்கள் மசோதாவை நிறைவேற்றிய  ஒன்றிய அரசின் இத்தகைய செயல் நாடாளுமன்ற ஜனநாயக மாண்பை கேள்விக்குள்ளாக்குகிறது.

இச்சட்டத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைப்பது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளதுஇந்த சட்ட திருத்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் இந்த சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் நவாஸ்கனி எம்பி குறிப்பிட்டுள்ளார்..

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு