பொய் செய்தி பரப்பும் ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறோம் கே. ஆர். நந்தகுமார் சிறப்பு பேட்டி.....

 பொய் செய்தி பரப்பும் ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறோம் கே. ஆர். நந்தகுமார் சிறப்பு பேட்டி.....

 திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இயங்கி வரும் 100 சதவீதம் அரசு நிதி உதவி பெறும்பள்ளியாகும்.

இப்பள்ளி கழிவரை கட்டிடம் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் இறந்து போனார்கள் என்கிற செய்தி கேட்டு எங்கள் உள்ளம் துடிதுடித்தது.

இன்னும் ஒரு சில மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இறந்த குழந்தைகளுக்கு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்..

 அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


 இந்த நிலையில்  தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட மாபெரும் விபத்து போல் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்

கள்....அது தனியார் பள்ளி அல்ல அரசு நிதி உதவி பெறும் பள்ளி என்று பலமுறை இன்றைய  என்னுடைய தொலைக்காட்சிப் பேட்டியகளில் தெரிவித்து விட்டேன்.

 இருந்தாலும் தொடர்ந்து தொலைக்காட்சிகள் தனியார் பள்ளி என்று பொதுமக்கள் மத்தியில் பொய்யான செய்தியை பரப்பி வருவது வன்மையாக கண்டிக்கிறோம்....

என்பதை அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து அனைத்து ஊடகங்களுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

 இனியும் தொடர்ந்து தனியார் பள்ளிகள் என்று கற்பனை கலந்த 

வர்ணனைகளை வெளியிட்டால்  எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் சம்மந்தப்பட்ட ஊடகங்கள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கே. ஆர். நந்தகுமார்.மாநில பொது செயலாளர்.