திருவண்ணாமலையில் டிசம்பர் 4 சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

 திருவண்ணாமலையில் டிசம்பர் 4 சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! 

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  சனிக்கிழமை  டிசம்பர் 4ஆம் தேதி தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் டிசம்பா் 4ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்கேற்ற தகுதிகள் கொண்ட இளைஞா்களை தோ்வு செய்கின்றனா்

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வித் தகுதியும் உடையவா்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

முகாமில் கலந்து கொள்ள வருவோா் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துவிட்டு 4 மாா்பளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, ஜாதி சான்று, கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் வர வேண்டும்

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்  வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.