மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் கேட்கவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் கேட்கவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்



மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று மக்களிடம் எந்த கருத்தும் எழவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர்களிடம் வேல்முருகனிடம் வெள்ளபாதிப்பு விவரங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், ‘தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மின்தட்டுப்பாடு விவரங்கள் குறித்தும் மின்வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டிருக்கிறார் என கூறினார். ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழை பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது.

தண்ணீர் தேங்கினால் மட்டுமே மின் தடை செய்யப்படும். ஓ.பன்னீர் செல்வம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரின் கருத்து. ஆனால் மக்கள் கருத்துக்களை முன்வைக்கவில்லை. இருந்தாலும் தமிழக முதல்வரிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என கூறினர்.

34,047 மின்மாற்றிகளில் 41மின் மாற்றிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவை வியாசர்பாடி, எழும்பூர், தியாகராயநகர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 4000 களப்பணியாளர்கள் சென்னை புறநகரில் இரவு பகலாக பணியில் உள்ளனர். 1,350 களப் பணியாளர்கள் திருவள்ளூரிலும், செங்கல்பட்டில் 2,040 பணியாளர்களும் உள்ளனர். இதைபோல் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் களப் பணியாளர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியில் உள்ளனர். தற்பொழுது வரை மின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லை. நிலக்கரி போதுமான அளவு உள்ளது. அண்ணாமலையின் படகு பயணம் குறித்த கேள்விக்கு நாம் அனைவரும் களப்பணியில் ஈடுபட்டு உள்ளோம். எனவே நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பேரிடர் காலங்களில் மக்களின் பொருளாதார சூழ்நிலையை உணர்ந்து இதுபோன்ற கட்டணங்களுக்கு கால அவகாசம் அளித்து வந்தனர். இந்த நிலையில் மக்களின் தேவையை உணர்ந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவது தான் நல்ல மக்களாட்சியின் மாண்பு. மனசாட்சியே இல்லாமல் ஒரு மந்திரி இப்போது இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது கேட்டாத்தான் குடுப்பீங்களா இல்லன்னா தர மாட்டீங்களா என்கிற கேள்வி பெருமளவில் எழுந்துள்ளது.