அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

ராமநாதபுரம் அக்-24

ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியை சேர்ந்த தென்னம் பிள்ளை வலசை அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.     இதில் 22.10.2021 வெள்ளிக்கிழமை  காலை 7 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம்,ஸ்ரீ லட்சுமி ஹோமம்,மற்றும் 

நிவக்கிரக ஹோமம் மற்றும் மாலை 6 மணி அளவில் அனுக்ஞை விநாயகர் பூஜை புண்ணியாவாசனம் பிரவேச பலி,வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் மிருத்சங்கரணம், ரக்க்ஷாபந்தனம்,யாக சாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, உள்ளிட்ட ஒன்றாம் கால பூர்ணாகுதி தீபாராதனை இரவு 9 மணி அளவில் நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது.         23.10.2021 அன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பம், ஆலய விமானகலச ப்ரதிஷ்டை மற்றும் 12.30 மணியளவில் இரண்டாம் கால பூர்ணாகுதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பம் இரவு 9 மணிக்கு மூன்றாம் கால பூர்ணாகுதி,  தீபாராதனை பிரசாதம் வழங்குதல், என்பன யந்த்ரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல்.இதனை அடுத்து 7 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை ,பூதசுத்தி தன பூஜை, சோம கும்பபூஜை,  பாலிகா பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம்,              ஸ்பரிசாகுதி, திரவியாகுதி ஹோமம், 4ம் காலமஹா பூர்ணாகுதி தீபாராதனைகள், நடைபெற்றன. 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் யாத்ரா தானம் , கடம்புறப்பாடு ஆலயத்தை 3 முறை சுற்றி வந்து ஆலயத்தின் மேல் உள்ள கும்பத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நிறைவுபெற்றது. இதன் பின் பொதுமக்களின் மீது புனித நீர்த் தெளிக்கப்பட்டது.   விமானம் மற்றும் மூலாலய.  மகாகும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

தொடர்ந்து மகா அபிஷேகம் தீபாராதனை விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து பகல் 12 மணி அளவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை ரெத்னாபில்டர்ஸ் N. ரெத்தினம், பொறியாளரும், ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் N.R.பால்பாண்டியன், ரூபினி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் மாநில சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா Ex.M.P. மாநில பாசறை செயலாளர் Dr.பரமசிவம், மாவட்ட செயலாளர் முனியசாமி, மத்திய கயறு வாரியத்தலைவர் குப்பு ராமு, மண்டபம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மருதுபாண்டியன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக ரெத்னாபில்டர்ஸ் உரிமையாளர் N.ரெத்தினம் அவர்களின் மனைவியும் பால்பாண்டி அவர்களின் தாயாருமான மறைந்த செல்வராணி அவர்களின் பெயரில் புதிய கட்டிடத்தை EX. MP. அன்வர்ராஜா  திறந்து வைத்தார். இத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு