ராபி அப்துல் பஸரியா மகளிர் ஷரீயத் கல்லூரியின் பரிசளிப்பு விழா

ராபி அப்துல் பஸரியா மகளிர் ஷரீயத் கல்லூரியின் பரிசளிப்பு விழா


ராமநாதபுரம் அக்-02 

ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி அன்- நுஸ்ரத் சமூக நல அறக்கட்டளையின் கல்வி சார் நிறுவனமான ராபி அப்துல் பஸரியா மகளிர் ஷரீயத் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று காலை 9 மணியளவில் ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் திருமண மண்டபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி ராபிஅதுல் பஸரிய்யா மகளிர் ஷரீஅத் கல்லூரி முதல்வர் மெளலவி O.M.அப்துல்காதர்பாக வி தலைமையில், நடைபெற்றது. குயவன்குடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜனாப் ஏ. அக்பர் அலி அவர்கள், மற்றும் அன்பு சமூக நல அறக்கட்டளை தலைவர் ஜனாப். முஹம்மது அலி ஆகியோர் முன்னிலை, வகித்தனர். கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர். மௌலவி. வி.எஸ். எஸ்.அபுபக்கர் சித்திக் பார்கவி கிராஅத்  ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் அபுபக்கர் சித்திக் பள்ளிவாசல் இமாம் மௌலவி. முஹம்மது ரபீக் உலவி வரவேற்புரையாற்றி.னார். வாழ்த்துரை  சமூக நல அறக்கட்டளையின் மேல் மட்ட குழு அன்- நுஸ்ரத், சட்ட ஆலோசகர் R. சித்தீக்ஷாநவாஸ்  மண்டபம் யூனியன் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி என்.கே. நாகூர் இப்ராஹிம் இம்தாதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இருமேனி இமாம் மெளலவி P. அஹமது ஜலால் ரஷாதி துவக்க உரை ஆற்றினார். அன்நுஸ்ரத் சமூகநல

அறக்கட்டளை சட்ட ஆலோசகர்  வழக்கறிஞர் சித்திக் ஷாநாவாஸ், உறுப்பினர் சையது மண்டபம் யூனியன் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி N.K.நாகூர் இப்ராஹிம் இம்தாதி வாழ்த்துரை வழங்கினார்கள்.அன்நுஸ்ரத் சமூக நல அறக்கட்டளை மேல் மட்ட குழு உறுப்பினர்மெளவி M.செய்யது இப்ராஹிம் ஹைரி அரிமுக உரையாற்றினார்.  வீரசோழன் ஜாமியா கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி கே.கே அப்துல் காதர் தாவூதி, மற்றும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி A.ஷாஜகான் ஷலாஹி  ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப். கே. நவாஸ்கனி எம்பி அவர்கள் பரிசுகளை வழங்கி பேசினார். சென்னை அடையாறு ஜும்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி டாக்டர். சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி அவர்கள் பேருறையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக அல். நஜ்மா அல்- ப்ரீதா  இன்டர்நேஷனல் குரூப்ஸ் - துபாய் தலைவர் அல்ஹாஜ் ஜே. ஜமால் முகமது அபுல் கலாம், U.S.A.கேப்டன் வால்டர் டாங்கர்ஸ் வி. எஸ். எஸ். முகம்மது அஸ்ரப் புகாரி மற்றும் விருதாச்சலம் எம். கே. எஸ். நெல் அரிசி மண்டி உரிமையாளர், அல்ஹாஜ் எம். கே. எஸ் .ஷாஜகான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். குயவன்குடி ஜூம்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி பிஎம் ஷேக் உசேன் மக்தூமி அவர்கள், நன்றி உரையாற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இதில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஜமாத்தார்கள், இமாம்கள் மற்றும் ஆன்றோர், சான்றோர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்கள். இதற்கான ஏற்பாட்டினை செயற்குழு உறுப்பினர்கள் மௌலவி அமீர் அப்பாஸ் ஹைரி மற்றும் ஹாபில் முஹம்மது மன்சூர்,  மௌலவி ரஷீத் கான். இஸ்கான் ராஃபியி ஆகியோர் வழாவிற்கான ஏற்பாட் டினை செய்தனர். நிகழ்ச்சியை விருதாச்சலம் மெளலவி ஹாஜி N.ஷவ்கத் அலி ஜைனி தொகுத்துவ ழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு