சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம்

சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம்


தந்தை பெரியார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஒற்றுமை கருத்தரங்கம்.

                 ஈரோடு மாவட்டத்தில்  தந்தை பெரியாரின் பிறந்த நாள் (செப்டம்பர் 17) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல் திருமாவளவனின் பிறந்தநாளளை (ஆகஸ்ட் 17 )முன்னிட்டு 23.10.21 அன்று நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ரவிக்குமார் தலைமையில் பெரியார் மன்றத்தில் மாபெரும் சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம் நடைபெற்றது இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தலைவர் திருமாவளவன்   பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளின் குரலாக  செயல்பட்டு வருகிறார் எனவும் ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் சிறந்த மனிதராகவும் எதிர்பார்ப்பற்ற சமூக செயல்பாட்டாளராகவும் விளங்குகிறார் எனவும் அவர் வழியை நாமும்  பின்பற்றி நடக்க வேண்டும் எனக் கூறினார் .கருத்தரங்கில் மாநில செய்தி தொடர்பாளர் கு.க.பாவலன் கருத்துரையாற்றினார், பெரியார் அணி மாநில துணைச் செயலாளர் எஸ் .எம். சாதிக் விளக்க உரையாற்றினார், ஈரோடு கிழக்கு மாநகர செயலாளர் அம்ஜத்கான் நன்றியுரையாற்றினார் , மேலும் மாவட்ட பொருளாளர் மாநில துணை அமைப்பை சேர்ந்தவர்களான ஈரோடு மேற்கு விஜயபாலன் ,ஈரோடு கிழக்கு மிசா தங்கவேல் ,ஈரோடு நகர செய்தித்தொடர்பாளர் பைஜில் மற்றும் ஈரோடு மாநகரத்தை சேர்ந்த அனைத்து  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.