ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், திரு.சிங்கம் பஷீர், திரு.சீனி பீரின், பாரத் பெட்ரோல் பல்க் திறப்பு விழா

ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், திரு.சிங்கம் பஷீர், திரு.சீனி பீரின், பாரத் பெட்ரோல் பல்க்  திறப்பு விழா

 ராமநாதபுரம் செப்-01 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அருகிலுள்ள ராமநாதபுரம் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், திரு.சிங்கம் பஷீர், திரு.சீனி பீரின், பாரத் பெட்ரோல் பல்க்  திறப்பு விழா மிக சிறப்பாக இன்று காலை (01-09-2021) நடைபெற்றது. முதல் விற்பனையை சென்னை திட்டமிட்ட குற்றங்கள் நுண் பிரிவு காவல்  கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார். டீசல் முதல் விற்பனையை தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலளாரும் முன்னாள் மாவட்ட ஆட்சியருமான ஹாஜி அபுல் ஹசன் IAS அவர்கள் துவக்கிவைத்தார். பெட்ரோல் முதல் விற்பனையை பாரத்  பெட்ரேலியம் மதுரை மண்டல மேலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார்.

. அலுவலக அறையை சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாஅத் சீர்மிகு தலைவர் ஹாஜி.காபத்துல்லா அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நாட்டிய குதிரைகள் நடனமாட, மற்றும் செண்டை மேளம் முழங்க அனைவரையும் வரவேற்றனர். வருகை தந்த அனைவரையும் திரு.சிங்கம் பஷீரின் சார்பில் திரு.சீனி பீர் வரவேற்றார். சிங்கம் பஷீர், திரு.சீனி பீர் மற்றும் அக்குவா குடும்பத்தின் சார்பில்  வருகை தந்தோரை ராமநாதபுரம் MR ஹைடக் இன்ஜினியர்ஸ் (P) இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு