அம்பாசமுத்திரம் அருகே, 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, ஆயுள் தண்டனை கைதி கைது!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, ஆயுள் தண்டனை கைதி கைது!
திருநெல்வேலி,செப்.1-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட "கவுதமபுரி" கிராமத்தை சேர்ந்தவர் பட்டமுத்து. இவரை, கடந்த 1998 -ஆம் ஆண்டு,அதே ஊரை சேர்ந்த ராமனின் மகன், பச்சாத்து (வயது.72) என்பவர், கொலை செய்ததாக, கைது செய்யப்பட்டு, அந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பச்சாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பச்சாத்து, மேல் முறையீடு செய்தார். அதனை தொடர்ந்து அவர், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே, மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பில்,பச்சாத்துக்கு "ஆயுள்" தண்டனையானது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தண்டனை பெற்ற
பச்சாத்து, கேரள மாநிலம் , "தொடுபுழா" என்னும் ஊருக்கு, தப்பிச் சென்றதுடன், அங்கு தன்னுடைய பெயரை, "மாணிக்கம்' என்று மாற்றிக்கொண்டு, தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் தற்பொழுது, பச்சாத்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல், துணை கண்காணிப்பாளர் எல்.பிரான்சிஸ் அறிவுறுத்தலின் பேரில், அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் ராமர், பெருமாள், சண்முக பாண்டியன் ஆகியோர் அடங்கிய, தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, 23 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த பச்சாத்தை, தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்து, "கைது" செய்தனர். இந்த வழக்கில், விரைந்து செயல்பட்ட, தனிப்படை போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட, காவல் துணை கண்காணிப்பாளர் எல்.பிரான்சிஸ் ஆகியோர், வெகுவாக பாராட்டினர்.